திருப்பதிக்கு தர்ம தரிசனத்தில் செல்ல திட்டமா? பக்தர்களின் கூட்டம் எப்படியிருக்கிறது?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மேலும் கடந்த 4 ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான கருட சேவை கடந்த 8ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த நாளில் 82,043 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். அது போல் 30,100 பேர் முடிகாணிக்கை கொடுத்தனர். அன்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ 4.10 கோடியாகும். அந்த வகையில் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி எத்தனை பேர் பெருமாளை தரிசித்தனர் என்பதை பார்க்கலாம்.
நேற்று ஒரு நாளில் 79.753 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 29,753 பேர் முடி காணிக்கை செலுத்தினர். நேற்று ஒரே நாளில் உண்டிகை காணிக்கை ரூ3.48 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம் வரை ஆனது.
நேற்றைய தினம் காலை ஹனுமன் வாகத்திலும் மதியம் தங்க தேரிலும் இரவு யானை வாகனத்திலும் பெருமாள் வலம் வந்து மாட வீதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications