புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் புரியாத புதிர்! குழந்தை வரம் கேட்டால் இரட்டை குழந்தை!
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருமண தடை நீங்கவும் குழந்தை வரம் வேண்டியும் 9 வாரங்கள் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம். எப்படி வேண்டுவது என பார்க்கலாம்.
இதுகுறித்து ஆன்மீக களத்தில் தீபா தங்கராசு என்பவர் கூறியிருப்பதாவது: திருமண பாக்கியம், குழந்தை வரத்தை கொடுக்கும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எத்தனையோ மருத்துவர்களை பார்த்தும், பல கோவில்களில் வழிபாடு செய்தும் குழந்தை இல்லாத தம்பதிகள் பெரும்பாலானோர் சலித்து போய் இருப்பார்கள்.
அத்தகைய தம்பதிகள் ஒரு தடவை புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை நம்பிக்கையுடன் வழிபட்டு, பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும்.
9 வார வழிபாடு
இதற்கு 9 வார வழிபாட்டு முறையை பின்பற்றுகிறார்கள். அந்த 9 வார வழிபாடு முறை வருமாறு:- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அரச மரம்
முதலில் அரச மரத்து விநாயகரை வணங்கி விட்டு பின்னர் கோவில் பிரகாரத்தை 11 தடவை சுற்றி வந்து வழிபட வேண்டும். பின்னர் அங்காள பரமேஸ்வரி கர்ப்ப நிலையில் மல்லாந்து படுத்து கிடந்து அருள் பாலிக்கும் சன்னதியை சுற்றி வந்து வணங்க வேண்டும். அப்படி வரும்போதே கருவறையையும் வழிபட்டு விடலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்காளம்மன்
அங்காளம்மனை சுற்றி வந்ததும், அவள் காலடியில் முட்டிப் போட்டு மனம் உருக வணங்க வேண்டும். அப்போது கோவில் பூசாரி அம்மன் பாதத்தில் வைத்து எலுமிச்சம் கனியை உருட்டி விடுவார்.
கனியை பிடிக்கணும்
அந்த கனியை முட்டி போட்ட நிலையிலேயே சேலை முந்தானையை விரித்துப் பிடித்து கீழே நழுவி விடாதபடி பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் கனியுடன் பூசாரி சிறிது வேப்ப இலையையும் தருவார். அதையும் பெற்றுக் கொண்டு வெளியில் வர வேண்டும்.

வேப்பமரம்
மகா மண்டபத்தில் அமர்ந்து எலுமிச்சம் கனியையும் வேப்ப இலையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி 9 வாரம் சாப்பிட்டு வர நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் வாரம் எந்த கிழமையில் சென்று வழிபாடு செய்கிறீர்களோ... அதே கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும்.
குழந்தை பாக்கியம்
முதல் வாரம் மட்டும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர் தன் சேலை முந்தானையை சற்று கிழித்து எடுத்து நாகாத்தம்மன் புற்று கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் தொட்டிலில் கட்டி தொங்க விட வேண்டும். இந்த தொட்டில் வழிபாட்டை முதல் வாரம் மட்டும் செய்தால் போதுமானது.
9 வாரங்கள்
9 வாரங்கள் இப்படி கனி சாப்பிட்ட தம்பதிகளில் 80 சதவீதம் பேர் குழந்தை பாக்கியம் பெற்று, மீண்டும் மீண்டும் புட்லூர் அங்காள பரமேஸ்வரியை தேடி, நாடி வந்து வணங்கி விட்டு செல்கிறார்கள்.
புட்லூர் அங்காளம்மன்
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் அருளால் புத்திர பாக்கியத்தை சுமக்கும் பெண்களில் கணிச மானவர்கள் இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் புரியாத புதிராக கூட உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்கள், குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் தம்பதிகள், தன்னை நாடி வந்து விட்டால் ஒரு குழந்தைக்கு பதில் இரண்டு குழந்தையாக கொடுத்து தன் பக்தர்களை அங்காள பரமேஸ்வரி அகம் குளிர செய்கிறாள் என்று பேசப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் இருப்பது எங்கே
சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் கோயில் உள்ளது. பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை போக்க அவர் மகிசுரன் என்பவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினாராம்.
கடனை திருப்பி மகிசுரன்
ஆனால் நிலத்தை அவரால் திருப்பமே முடியவில்லை. கடனை உடனே அடைக்குமாறு மகிசுரன் வற்புறுத்தியதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்தாத பொன்மேனி மீது மகிசுரனுக்கு கோபம் வந்தது.
பூங்காவனம்
அந்த ஊரில் இருந்து பூங்காவனத்திற்கு சென்று அன்று இரவுக்குள் நிலத்தை உழுது, விதைத்து நீர் பாய்ச்சுமாறு மகிசுரன் கட்டளையிட்டான். ஒரே இரவில் அனைத்தையும் செய்வது எளிதானதா என்ன? இருந்தாலும் பொன்மேனி, பூங்காவனம் சென்றான். அங்கு கருமாரியை கை கூப்பி வணங்கி இரவில் நிலத்தை உழுதான். அப்போது அவனுடைய ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போல் இருந்தது.
பார்வதி தேவி
என்ன என பார்த்த போது ரத்தம் பீறிட்டது. வேகமாக ரத்தம் வடிந்ததை பார்த்த பொன்மேனிக்கு கண்கள் இருண்டு மயக்கம் ஏற்பட்டது. அப்போது ஒரு அசரீரி அவன் காதில் சொன்னது. "பயப்படாதே, கொஞ்ச நேரத்திற்கு முன்பு வயதானவராக வந்தது சிவபெருமான். மூதாட்டியாக வந்தது பராசக்தி, நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார்.

மண்புற்று
நான் உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அப்போது நீ கலப்பையால் உழுத போது ரத்தம் வழிந்தது. வலியால் நானும் அப்படியே படுத்துவிட்டேன். நீ செய்தது தவறு இல்லை. என்னை இடித்து காயப்படுத்தியதன் மூலம் நீ என்னை உலகிற்கு காட்டிவிட்டாய்.
பொன்மேனி
பொன்மேனி கண் விழித்ததும் அசரீரி குரல் பார்வதி தேவியினுடையது என தெரிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. உடனே சயன நிலையிலேயே அங்காளம்மனை பிரதிஷ்டை செய்யலாம் என ஊர் மக்கல் முடிவு செய்தனர்.
கர்ப்பிணி
அப்போது பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் பூங்காவனத்தம்மன் என்ற பெயரையும் பெற்றார். இந்த புட்லூர் ஆலயத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. அதாவது சிவனும் நிறைமாத கர்ப்பிணியான பார்வதியும் மேல்மலையனூர் கோயிலுக்கு புட்லூர் வழியாக சென்றனர்.
வேப்பமர நிழல்
களைப்பாக இருந்ததால் வேப்பமர நிழலில் கர்ப்பிணி பார்வதி அமர்ந்தாள். தாகம் எடுத்ததால் சிவன் அருகில் இருந்த கூவம் நதியிலிருந்து க்கு தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் சிவப்பெருமானால் நதியை கடந்து வரமுடியவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என சிவன் காத்திருந்தார்.
வளைகாப்பு
அப்போது தாகத்தில் இருந்த பார்வதி தேவி உட்கார முடியாமல் அப்படியே படுத்துவிட்டார். அவரை சுற்றி மண் புற்று ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளம் ஓய்ந்து சிவன் வந்து பார்த்த போது புற்றுக்குள் பார்வதி அமர்ந்துவிட்டதை பார்த்து அப்படியே நின்றுவிட்டார். இந்த புட்லூரில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று இன்றும் வளர்ந்து வருகிறது. இந்த அம்மனுக்கு பலர் வளைகாப்பு செய்வதாகவும் வேண்டிக் கொண்டு செய்கிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications