இந்த நாளில் மறந்தும் கூட கடன் வாங்காதீர்கள்.. கடன் அடைய செய்ய வேண்டிய சிம்பிள் பரிகாரம் இருக்கு!
சென்னை: மறந்தும் கூட சில நாட்களில் கடன் வாங்கக்கூடாது. அப்படி நாள் கிழமை, நேரம் பார்க்காமல் வாங்கும் கடன் நம்மேல் அட்டை போல ஒட்டிக்கொண்டு உறிஞ்சி எடுத்து விடும். தெரிந்தோ தெரியாமலோ அவசரத்திற்கு வாங்கிய கடன் மலைபோல குவிந்து விட்டதா? சிம்பிள் பரிகாரம் பண்ணுங்க தீராத கடனும் தீரும் வகையில் நமக்கு வருமானம் அதிகரிக்கும்.
கடனில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக கடன் வாங்கியே ஆக வேண்டியுள்ளது. வீடு கட்டுவதற்கு, பிள்ளைகள் படிப்பு செலவுக்கு, குழந்தைகளின் திருமண செலவிற்கு என ஏதாவது ஒரு விசயத்திற்காக நாம் சாதாரணமாக வாங்கும் கடன் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்து விட்டு விடும். எப்படி இதில் இருந்து மீளப்போகிறோம் என்று யோசித்து யோசித்து பலருக்கும் மன அழுத்தம் வந்து விடும்.

கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.
நமக்கு வருமானம் வரும் அதை வைத்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்துதான் பலரும் கடன் வாங்குவார்கள் தொழிலில் முதலீடு செய்வார்கள். ஆனால் தொழில் நஷ்டமாகி விடும் வருமானம் வரும் வழியெல்லாம் அடைந்து போகும் அதே நேரத்தில் கடன் மட்டும் மலையாக வளர்ந்து நம்மை மலைத்து போக வைக்கும். சரி கடன் பிரச்சினை தீர என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் இந்த செய்தி.
கடன் தீர வேண்டுமானால் நமக்கு வருமானம் வர வேண்டும். வருமானம் அதிகரிக்க நாம் வழி செய்ய வேண்டும். பணம் பலவழிகளிலும் இருந்து வந்தாலே நமக்கு கடன் தீரும். அதற்கு முதலில் நாம் பிடிக்க வேண்டியது விநாயகரைத்தான். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம். செவ்வாய்க்கிழமை நாளில் வெற்றிலையில் மாலை கட்டி அதை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் நமக்கு வருமானம் அதிகரிக்கத் தொடங்கும் இதனால் கடன் பிரச்சினை நீங்கும். 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
நமக்கு வருமானம் வருவதற்கு சுக்கிரன் அருளும், குருவின் அருளும் தேவை. நெல்லிக்கனி சுக்கிரன் அம்சம் நிறைந்தது. வைட்டமின் சத்துக்கள் அடங்கிய நெல்லிக்கனியை நாம் சாப்பிட்டால் நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயின்றி இருந்தாலே உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தினமும் காலையில் நெல்லிக்கனி சாப்பிடுபவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மனம் உற்சாகமாக இருக்கும், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
நமக்கு பணப்பிரச்சினை தீர வேண்டும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் காய்கறி கடைக்கு போகும் போதெல்லாம் நெல்லிக்காய் வாங்கி வர வேண்டும். பொதுவாக புதன்கிழமை நாளில் நெல்லிக்காய் வாங்கி நாம் தானம் செய்ய வேண்டும். நம்மை விட வயது மூத்தவர்களுக்கு நாம் மூன்று நெல்லிக்காய்களை தானம் செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் அளவிற்கு வருமானம் வரத் தொடங்கும்.
அதே போல செவ்வாய்க்கிழமை நாளில் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட வேண்டும். சிவன் கோவிலில் உள்ள தூணில் உள்ள அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட அனுமன் நம்முடைய கடன்களை வெண்ணெய் போல உருக வைத்து விடுவார். 9 வாரங்கள் நாம் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட வேண்டும். நாம் இந்த பரிகாரங்களை செய்யும் அதே நேரத்தில் வருமானம் வருவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.
கடன் பிரச்சினை தீர வெள்ளிக்கிழமையன்று காலை குளித்து பூஜைகள் செய்து, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது. வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் போது ஏற்கனவே செய்ததை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.
நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நாளில் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் படிக்கவும். கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது நல்லது.
கடன்களை வாங்குவதற்கு எப்படி நாள் பார்க்கிறோமோ அதே போல கடனை அடைக்கவும் நாள் நேரம் பார்க்க வேண்டும். கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
கடனுக்கு இஎம்ஐ கட்டும் போது நாம் குளிகை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி வந்தால் மலைபோல இருந்த கடனும் படிப்படியாக குறையும். எல்லாமே நம்பிக்கைதான். நாம் நம்பிக்கையோடு நம்மால் முடிந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை படிப்படியாக காணாமல் போகும். எனவே நம்பிக்கையோடு ஏதாவது பரிகாரத்தை செய்யுங்கள். வாழ்வதற்கான வழி பிறக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications