Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்தவர்கள் வர்றாங்களா? கனவில் முன்னோர்கள் வந்தால் இதுதான் விஷயம்.. இந்த கனவு மட்டும் வரவேக் கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் காணும் கனவுகள் அனைத்துமே பலிப்பதில்லை. நம்முடைய ஆழ் மன எண்ணங்களே, நம்முடைய கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில், சில கனவுகள் சாதாரணமாக வரலாம்.. சிலசமயம், இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வரக்கூடும். இதுகுறித்து கனவு சாஸ்திரம் என்றழைக்கப்படும் அபிதான சிந்தாமணி கலைக்களஞ்சியம் எனும் நூல் கூறும் பலன்களை சுருக்கமாக பார்க்கலாம்.

சொப்பன சாஸ்திரத்தில் எத்தனையோ விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.. குறிப்பாக. நாம் உறவினர் வீட்டிற்குப் போய் சாப்பிடுவது போல கனவு கண்டால், குடும்பத்தில் சண்டை வரும் என்று பொருள்..

Spirituality Kanavu palan Iranthavargarl

உறவினர்களுடன் நம்முடைய வீட்டிற்கு வந்து வாழை இலை போட்டு சாப்பிடுவது போல வந்தால், கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெறும் என்று பொருள். மலத்தை மிதிப்பது போலவே மலத்தையோ கனவில் கண்டால் நிதி பெருகும் என்பதுடன், திருடு போயிருந்த பொருட்கள் திரும்ப கிடைக்குமாம்.

சவப்பெட்டி: அதேபோல இறந்தவர்களை கனவில் காண்பது குறித்தும் கனவு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.. அதாவது,
சவப்பெட்டியை கனவில் கண்டால் நெருங்கியவர்கள் யாரோ மரணிக்க போகிறார்கள் என்று அர்த்தம். நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இறப்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் நம்மைவிட்டு விலகப்போகிறது என்று அர்த்தம். தானே இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால் நன்மையும், வாழ்வில் மகிழ்ச்சியும் ஏற்பட போகிறது என்று அர்த்தமாம்..
இறந்தவர்கள் கனவில் வந்தாலே விரைவில் நல்ல செய்தி வரப்போகிறது, உங்கள் ஆயுளும் கூடப்போகிறது என்று அர்த்தம். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்..

அனைத்தும் நன்மைக்கே: இறந்தவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு வந்தால், அனைத்தும் நன்மைக்கே என்று அர்த்தம்.,.. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால், மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து விடுவீர்களாம்.. இறந்தவர்கள் உங்களிடம் பேசினால், நெருக்கடி நேரத்தில் உங்களுக்கு யாராவது உதவு வருவார்கள் என்று பொருள்.

இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
இறந்தவர்களுடன் நீங்களே பேசுவது போல் கனவு வந்தால், நற்பெயர் கூடப்போகிறது அர்த்தம். இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், செல்வமும், புகழும் சேரும்..

வார்னிங்: இறந்து போன அம்மா கனவில் வந்தால், குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம். இறந்துபோன பெற்றோர் கனவில் வந்தால், உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிப்பதற்காக வந்தார்கள் என்று பொருள். ஆனால், இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் அது நல்லதில்லை.. அன்றைய தினம் காலையிலேயே குளித்து, கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+