இந்த பறவை உங்க வீட்டிற்குள் வந்தால் நல்லது.. காகம், அணில் வருதா? புறாக்கள் கூடு கட்டுதா? அட சூப்பர்
சென்னை: வீடுகளுக்குள் பறவைகள் வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? எந்தெந்த பறவைகள் வீடுகளுக்குள் வரலாம்? இதுகுறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ன?
பொதுவாக வீடுகளிலும், வீடுகளுக்கு பக்கத்திலும் தேன்கூடு இருக்க கூடாது என்பார்கள்.. காரணம், தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம்.. அத்துடன் கடன் தொல்லைகளும், வறுமையும் சேர்ந்து கொள்ளும் என்பார்கள்.

குளவிகள்: ஆனால் குளவிகளை அப்படி சொல்வதில்லை.. வீட்டில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. பொதுவாக, இந்த குளவிகள், அதன் கூடுகளை பார்த்து பார்த்து கவனமாக கட்டுமாம்.. இதுபோலவே, இன்னும் சில பறவைகள் குறித்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.. காரணம், பறவைகளின் வருகையை வைத்துக்கூட அந்த வீட்டின் அதிர்ஷ்டமும், அபாயமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், காகம் முக்கியமான பறவையாகும்.. அமாவாசை தினங்களில் காகத்திற்கு சாப்பாடு வைத்தபிறகே, அனைவரும் சாப்பிட வேண்டும்.. ஆனால், அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே காகத்திற்கு சாப்பாடு வைத்தால், நாம் அறியாமல் செய்த பாவங்கள்கூட நம்மை விட்டு நீங்கி விடுமாம்.
புறாக்கள்: அந்தவகையில், சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், நம்முடைய வீட்டிற்கு வந்தால் மிகவும் நன்மை கிடைக்கும். சமாதான பறவையான புறாக்கள் வீடுகளுக்குள் வந்தால், வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கிவிடும். அதேபோல, மஹாலக்ஷ்மியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்குள் வந்தால், வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.. மகாவிஷ்ணுவின் வாகனமான கழுகுகள், வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாம்.
மழையை மட்டுமல்ல, வீட்டிற்கு வரப்போகும் ஆபத்தையும் முன்கூட்டியே நமக்கு உணர்த்தக்கூடியது மயில்கள்.. அந்தவகையில், மயில்கள் வீட்டுக்குள் வருவதும் நல்லதே.
ஆமை வீட்டிற்கு ஆகாது என்று பரவலாக சொல்வார்கள். ஆனால், அது உண்மை கிடையாது.. வீட்டிற்குள் ஆமை வந்தாலும், சிறப்புதான்.. ஏனென்றால், விஷ்ணுவின் அவதாரமாக ஆமை கருதப்படுகிறது. இதனால், லட்சுமி தேவியின் அருள் கிடைப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, அமைதியை வீட்டிற்குள் மேம்படுத்துமாம். தவளையும், அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
கருப்பு எறும்புகளையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளாலாம்.. கருப்பு எறும்பு சனி கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதால், உங்கள் வீட்டிற்கு வாயில் முட்டையுடன் வந்தால், விரைவில் கடனில் இருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாம்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications