சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. கேரளா அரசின் சுவாமி சாட்போட்! ஒரு ’ஹாய்’ மட்டும் போதும்!
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி "சுவாமி சாட்போட்" ( Swami Chatbot ) உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் இந்த 6238008000 எண்ணில் "Hi" குறுஞ்செய்தி அனுப்பி தேவையான உதவிகளை பெறமுடியும் என தமிழ்நாடு அரசுக்கு கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சித்தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், "உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர் உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதில் இடர்ப்பாடுகள் ஏதேனும் ஏற்பாடுமானால், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் "சுவாமி சாட்போட்" "Swami Chatbot" என்னும் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் மூலம் 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து கேரள மாநில பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதால், எதிர்பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்படுமானால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்பட்டால் அத்தகைய தருணங்களில் "சுவாமி சாட்போட்" (Swami Chatbot) என்னும் பயண வழிகாட்டியை கைப்பேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனே கிடைக்கும்.
அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அவசர நேரங்களின் போது உடனடி சேவைகளை பக்தர்களுக்கு அளிக்கிறது.
மேலும், இந்த "சுவாமி சாட்போட் Swami Chatbot" வாயிலாக சபரிமலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கும் நேரங்கள். பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள். உணவகங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய தகவல்களையும் கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜைக் காலங்களில் வருகை தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், குறித்த காலத்தில் வந்து செல்வதற்கு ஏற்ற வசதிகளையும், பாதுகாப்பு மற்றும் கோயில் தொடர்பான சேவைகளையும் இந்த "ஸ்வாமி சாட்போட்" எளிதில் வழங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் இந்த விவரங்களை அறிந்துகொண்டு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பாகவும் சென்று வரலாம்." என கூறப்பட்டுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications