Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகா கள்ளழகா..பூப்பல்லக்கில் புறப்பட்டார்..பிரியாவிடை கொடுத்த மதுரை மக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் ஆறு நாட்கள் தங்கியிருந்து மக்களுக்கு தரிசனம் அளித்து விட்டு பூப்பல்லக்கில் மீண்டும் அழகர் கோவிலுக்கு திரும்பினார். கள்ளழகரை பிரிய மனமில்லாமல் மதுரை மக்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர். வழியெங்கும் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த கள்ளழகர் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார்.

மாசி மாதத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழாவையும், சித்திரை மாதத்தில் நடந்த அழகர் கோவில் திருவிழாவையும் சைவ, வைணவ மதத்தின் ஒற்றுமைக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் ஒரே மாதத்தில் அதாவது சித்திரை மாதத்தில் நடத்த அப்போது மன்னராக இருந்த திருமலை நாயக்கர் முடிவு செய்தார்.

Madurai Chithirai thiruvizha 2023: People Piriyavidai to Lord Kallazhagar returns to Alagarkoil

அதன்படி இந்த இரண்டு கோவில்களின் திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் தேரோட்டத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.

சித்திரை திருவிழாவுக்காக மே 3ல் அழகர்கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். மே 4ஆம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மதுரை வந்த கள்ளழகருக்கு சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வரவேற்பு அளித்தனர்.

Madurai Chithirai thiruvizha 2023: People Piriyavidai to Lord Kallazhagar returns to Alagarkoil

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். அழகர் ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

தீர்த்தவாரிக்கு பின்னர் ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார்.
மே 6 ஆம் தேதி சனிக்கிழமை காலை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். தவளையாக இருந்த தவம் செய்து வந்த முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை விளக்கும் வகையில், சிறிய குளமும் அதில் முனிவரின் உருவம் போன்ற பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரைகொக்கு வானில் பறக்கவிடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Madurai Chithirai thiruvizha 2023: People Piriyavidai to Lord Kallazhagar returns to Alagarkoil

மாலையில், அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார். அங்கு நள்ளிரவு முதல் விடிய விடிய தசாவதார காட்சி தொடங்கியது. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட திருக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.

நேற்று பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து தல்லாகுளத்தில் கள்ளழகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார். விடிய விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். வழியெங்கும் மண்டகப்படிகளில் கள்ளழகருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர். கள்ளழகரை காண இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்ற நினைத்துக்கொண்டு பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+