மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி..தை அமாவாசை நாளில் இந்த ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்
சென்னை: தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர சிறந்த நாள். இந்த நாளில் மகர ராசியில் சூரியன் சுக்கிரன் கூட்டணியில் சந்திரன் இணைகிறார். நாளைய தினம் ஜனவரி 21ஆம் தேதி தை அமாவாசை நாளில் மகரத்தில் இணையும் மூன்று கிரகங்களின் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். அமாவாசை யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்றும் தெரிந்து கொள்வோம்.
மகரம் ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. கர்ம காரகன் சனியின் வீட்டில் சூரியன்,சுக்கிரன் சந்திரன் இணைந்திருப்பதால் மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகரம் ராசிக்காரர்கள் வீட்டிலும் வெளியிடத்திலும் கவனமாக இருப்பது அவசியம். வேலையிலும் வேலை செய்யும் இடத்திலும்
கவனமும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் உங்கள் வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலே போதுமானது. தை அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து அன்னதானம் கொடுப்பது சிறப்பானது.
கும்பம் ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைந்துள்ளன. சனியின் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு வரும் கூடவே விரைய செலவுகள் வரும். பணம் விசயங்களில் கவனம் தேவை. பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்ய வேண்டும். தை அமாவாசை நாளில் சிவ தரிசனம் செய்வது நல்லது.
கடக ராசிக்கு சூரியன், சுக்கிரன்,சந்திரன் பார்வை நேரடியாக கிடைக்கிறது. இது அற்புதமான யோகம். களத்திர ஸ்தானத்தில் இணைந்துள்ள கிரகங்களினால் கூட்டுத்தொழில் சிறப்படையும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். அஷ்டமத்து சனி காலம் என்றாலும் குரு பகவான் பார்வையும் கிடைப்பதால் தை அமாவாசை நாளில் குடும்பத்தில் குதூகலமும் மன அமைதியும் உண்டாகும். தயிர் சாதம் தானம் கொடுக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
இந்த கிரக சேர்க்கையால் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளன. அதே போல மீன ராசியில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளதால் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இனிப்பு தானம் தர நன்மைகள் நடைபெறும்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம், சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள், புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மூன்று கிரக சேர்க்கையால் தை அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடை தானம் கொடுக்க அற்புத பலன்கள் உண்டாகும்.
மேஷம், விருச்சிகம், துலாம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கையால் பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் வரும். லாட்டரியில் ஜாக்பாட், பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் முன்னேற்றமும் இடமாற்றமும் ஏற்படும். சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். தை அமாவாசை நாளில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் கொடுக்கவும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கவும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications