ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி..சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சியை அலங்கரிக்கும் தங்க வைர நகைகள்
மதுரை: ஆயிரம் அற்புதங்கள் நிறைந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இறைவனை திருவிளையாடல் நிகழ்த்திய திருத்தலமான மதுரையில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். மாணிக்க மூக்குத்தி மட்டுமல்ல இன்னும் என்னென்ன நகைகள் மதுரை மீனாட்சியை அலங்கரிக்கிறது என்று பார்க்கலாம்.
அம்மனை அலங்கார ரூபினியாக பார்ப்பது அற்புதமானது. அதுவும் மதுரை மீனாட்சியை கர்ப்பகிரகத்தில் பார்க்கும் போது மாணிக்க மூக்குத்தி ஜொலிக்கும். எத்தனை ரூபத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார் எத்தனை அலங்காரங்கள் செய்யப்படுகின்றன என்று முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் ஒரு பக்தர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.
சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.
மீனாட்சி அம்மனுக்கு முதலில் அபிஷேகம், பூஜைகள் செய்த பின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.
பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது. மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
திருவனந்தல் - பள்ளியறையில் - மஹா ஷோடசி, ப்ராத சந்தியில் - பாலா,6 - 8 நாழிகை வரையில் -
புவனேஸ்வரி,12 -15 நாழிகை வரையில் - கெளரி,மத்யானத்தில் - சியாமளா, சாயரக்ஷையில் - மாதங்கி
அர்த்த ஜாமத்தில் - பஞ்சதசி,பள்ளியறைக்குப் போகையில் - ஷோடசி என அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும். ஒரேநாளில் புவனேஷ்வரி,
கௌரி,சியாமளா,மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்.
மதுரையை ஆண்ட மாமன்னர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தங்கம், வைரம், வைடூரியம், நவ ரத்தின ஆபரணங்கள் செய்து காணிக்கையாக அளித்தனர். இந்த நகைகள் திருவிழாக்களின் போது முக்கியமாக 12 நாள் சித்திரை திருவிழா உற்சவங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும்.
மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்திலும் முத்து, மரகதகற்கள், வைரம், வைடூரியம், கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய முத்து மேற்கட்டி இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்கள் பதிந்துள்ளன. முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள்.
மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது.
பட்டாபிஷேக கிரீடம், இதன் எடை 134 தோலா. 920 மாணிக்கம், 78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.
ரத்தின செங்கோல், இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசுமாரை கிரீடம், தலைப்பாகை கிரீடம். அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது.
நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது.
பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை. கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.
இடுப்பில் கட்டும் நாகர் ஒட்டியாணம். இதில் 113 மாணிக்க கற்கள், 28 பலச்ச வைரம், 8 மரகத கற்கள், 66 முத்துக்கள் பதித்தது. இதன் எடை 33 தோலா. அம்மனின் திருவருடிகள் தாங்கும் தங்க மிதியடிகள். தங்க மிதியடிகள் ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது.
மீனாட்சி அம்மனின் தங்க, வைர நகைகளை பற்றிய விவரங்கள் அனைத்தும் 1974ஆம் ஆண்டில் நடைபெற்ற குடமுழுக்கு விழா மலரில் இடம் பெற்றுள்ளன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications