மரகதலிங்கத்திற்கு பால், சந்தன அபிஷேகம் செய்தால் என்ன நடக்கும்? அற்புதமான மரகதம்!
சென்னை: மரகத லிங்கத்திற்கு பால், சந்தனம் அபிஷேகம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? மரகதம் எங்கிருந்து கிடைக்கிறது. இதற்கு மருத்துவ குணம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மரகதலிங்கம் குறித்து பல்வேறு தகவல்களை பார்க்கலாம்.

மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது.
பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன.
இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும்.
நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்ததாகும். மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப் பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டன. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.
இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது.
இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம். மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும், புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.
மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் . சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.
ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.
சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது. ! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை எனும் பகுதியில் உள்ள மங்களநாதர் கோயிலில் நடராஜர் மரகதத்தில் உள்ளார். இந்த மரகத நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். வருஷத்தில் ஒரு நாள் வரும் ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் சந்தனம் களையப்பட்டு மரகதமாகவே நடராஜர் சிலை காட்சியளிக்கும்.
இந்த சந்தனங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மரகதத்தின் மீது பூசப்பட்ட சந்தனத்தில் மருத்துவ குணம் இருப்பதால் இந்த சந்தனத்தை வாங்க போட்டி போடுவர். பின்னர் ஆருத்ரா தரிசனம் முடிந்ததும் மீண்டும் சந்தனம் அரைக்கப்பட்டு மரகத நடராஜர் மீது பூசப்படும்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications