திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 6: பால் கொடுக்க வந்த அரக்கிக்கு கண்ணன் மோட்சம் கொடுத்தது ஏன்?
திருப்பாவை - பாடல் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: என்ன தோழியே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? பறவைகள் அதிகாலையிலேயே எழுந்து கீச்சிடும் இனிய ரீங்காரம் உனக்கு கேட்கவில்லையோ? கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாள் கோயிலில் வெள்ளை நிறத்தில் உள்ள சங்குகளில் இருந்து வரும் சப்தமும் உனக்கு கேட்கவில்லையா? பேய் வடிவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் குடித்து அவளுடைய உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணனை முனிவர்களும் யோகிகளும் ஹரிஓம் என அழைப்பதுமா உனக்கு காதில் விழவில்லை! உடனே எழுந்து குளிப்பாயாக!

விளக்கம்: பூதகியை அனுப்பியது கம்சன்தான். கண்ணன் நினைத்திருந்தால் பூதகியை சித்ரவதை செய்திருக்கலாம். ஆனால் அவர் தாய் ஸ்தானத்தில் தனக்கு பால் கொடுக்க வந்ததால் அவளுக்கு மோட்சம் கொடுக்க நினைத்து அவள் மடியிலேய பால் குடித்து அவரது உயிரை குடித்தார்.
திருவெம்பாவை பாடல் - 6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
பாடல் பொருள்: மான் போன்று நடப்பவளே! நேற்று நீ எங்களிடம் என்ன சொன்னாய் , அதிகாலையில் வந்து எழுப்புவோன் என சொன்னாய்! ஆனால் நீ இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாய், நாங்கள் உன்னை வந்து எழுப்புகிறோமே! நீ சொன்ன சொல் எந்த திசைக்கு சென்றுவிட்டது தோழியே? சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாததற்கு கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா, இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை! விண்ணவர்களும் மண்ணவர்களும் ஈசனை புகழ்ந்து பாடி வருகிறார்கள். அவனை நினைத்து உருகாமல் இன்னும் தூக்கம் என்ன? எழுந்து ஈசன் புகழ் பாடு! என தோழிகள் , மற்றொரு தோழியை எழுப்புகிறார்கள்.
விளக்கம்: பொதுவாக சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். வார்த்தைகளை விட செயலே உயர்ந்தது. சொன்ன சொல்லை காக்காவிட்டால் மற்றவர்கள் கேலி செய்ய நேரிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications