ஜெகம் ஆளும் மாசி மகம்.. சுப காரியத்தடைகள் நீங்க..பவுர்ணமியில் புனித நீராடி முன்னோர்களை வணங்குங்கள்
தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறந்த மாதம் மாசி மாதம். இம்மாதம் நீராடலுக்கு உகந்த மாதமாகப் பாரக்கப்படுகிறது. மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்பது நம்பிக்கை.
மதுரை: மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதே போலத்தான், தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறந்த மாதம் மாசி மாதம். இம்மாதம் நீராடலுக்கு உகந்த மாதமாகப் பாரக்கப்படுகிறது.
காரணம், இம்மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருவது தான். இதை மாசி மகம் என்றும், இதனால் தான் இம்மாதம் இந்துக்களின் வாழ்வில் முக்கிய நாளாகப் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமிகளில் மாசிப் பவுர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.
மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. இந்த நாளில் பிறந்தவர்களுக்கு முன்னோர்களின் பரிபூரண அருளும் அரசாளும் தகுதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி யோகம் கோடிகளை அள்ளித்தரும்.

மாசி மகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.
மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
மாசி மகம் நாளில் திருநல்லூர் கோயிலில் உள்ள சப்தசாகர தீர்த்தத்தில் நீராடினால், உன்னுடைய பாவம் விலகும், என்று அசரீரி கேட்க, பாண்டவர்களின் தாய் குந்திதேவி, அவ்வாறே அங்கு சென்று நீராடியதால் கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்கியது என்பது ஐதீகம். இத்தீர்த்தம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
மாசி மகம் என்ற உடன் முதலில் நம் நினைவுக்கு வருவது, கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் வைபவமும், வட மாநிலங்களில் பெருவாரியாகக் கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்ச்சியும் தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாசி மகம் நாளன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கும்பகோணத்திற்கு வந்து மகாமகம் குளத்தில் இறங்கி நீராடுவதும், பலர் தலையில் நீரைத் தெளித்துக்கொள்வதும் உண்டு.
மாசி மகம் நாளில் நீராடினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதே போல், வட மாநில மக்கள் திரிவேணிசங்கமத்தில் இறங்கி நீராடி மகிழ்வதும் உண்டு. அதுவும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா என்றால் நாடு முழுவதும் இருந்தும் வந்து, திரிவேணிசங்கமத்தில் நீராடுவதுண்டு. குறிப்பாக நாசிக், ஹரித்துவார் பிரக்யாராஜ், உஜ்ஜயினி உள்ளிட்ட இடங்களில் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசி மகம் நாளில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், பெரும்பாலான இந்துக்கள் விரதமிருந்து, நதிகள், கடல், நீர்நிலைகளில் நீராடி கோயில்களுக்கு சென்று வழிபடுவதுண்டு. அதே போல் புகழ்பெற்ற கோயில்களில் இருந்து மூலவர்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வந்து தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதுண்டு.
மாசி மகம் நீராடல் என்பது பண்டைய காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில், பாண்டவர்களின் தாய் குந்திதேவி, தான் திருமணம் ஆவதற்கு முன்பே, சூரிய பகவான் மூலம் பெற்ற கர்ணனை ஆற்றில் கொண்டு போய் விட்ட சோக நிகழ்வு மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு சமயம், ஒரு முனிவரை தரிசித்து வணங்கி, தான் கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்குவதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார்.
அதற்கு முனிவர், மாசி மகம் நாளில் ஏழு கடலில் நீராடினால் அந்தப் பாவம் நீங்கும் என்றார். ஒரே நாளில் தான் எப்படி ஏழு கடலில் நீராட முடியும்? என்று இறைவனை மனமுருகி வேண்டிக்கொள்ள, உடனே, திருநல்லூர் கோயிலில் ஒரு தீர்த்தம் உள்ளது, அந்த தீர்த்தத்திற்கு சப்தசாகர தீர்த்தம் என்று பெயர். அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களையும் வரவழைக்கிறேன், அந்த தீர்த்தங்களையும் ஏழு கடல்களாக நினைத்துக்கொண்டு, மாசி மகம் நாளில் நீராடி எழுந்தால், உன்னுடைய பாவம் போகும், என்று அசரீரி கேட்டது. குந்தி தேவியும் அப்படியே செய்து பாவ விமோசனம் பெற்றார் என்பது ஐதீகம். இத்தீர்த்தம் அமையப்பெற்ற கோயில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.

மகம் நட்சத்திரத்தை நம் முன்னோர்கள் பித்ருதேவ நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். காரணம், இந்துக்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் பித்ருக்களை வணங்கி அவர்களின் அசீர்வாதம் கிடைத்த பின்பு தான் சுபகாரியங்களைத் தொடங்குவார்கள். ஆகவே, இம்மாதத்தில் பித்ருக்களுக்கு பூஜை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். பவுர்ணமிகளில் மாசி பவுர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.
மாசி மாதம் தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்த வல்லாளர் என்ற மன்னனுடையது. மிகச் சிறந்த சிவ பக்தனான வள்ளாளருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மிகுந்த கவலையுடன் அவர் இருந்தார். அதே நேரத்தில் சிவ பெருமானுக்கு உரிய பூஜைகள், வழிபாடுகளை அவர் செய்யத் தவறியதே இல்லை. இந்த நிலையில் மன்னரின் கவலையைப் போக்க அவருக்கு சிவபெருமானே காட்சி கொடுத்தார். அப்போது, தான் இறந்தால் தனக்கு சிவபெருமானே இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று வல்லாளர் கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் இதற்கு உறுதி அளித்தார்.
மாசி மகம் நாளில் மன்னர் உயிரிழந்தார். வாக்களித்த படி சிவபெருமானே நேரில் வந்து இறுதிச் சடங்கை செய்தார். மேலும், மாசி மகத்தன்று கடலில் நீராடுபவர்களுக்கு முக்தி கிட்டும் என்று வரமும் கொடுத்தார். அதனால் மன்னனுக்கு முக்தி கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று சிவபெருமான் பூமிக்கு வந்து கடலில் நீராடிச் செல்கிறார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மாசி பவுர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் இன்றும் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பு. அதோடு, நம்முடைய முன்ஜென்ம கர்ம வினைகளைப் போக்கிக் கொள்ள மாசி மகம் நாளில் புனித நீராடினால், அனைத்து தோஷங்களும் நீங்கும். சுப காரிய தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications