பீரோவில் காசில்லையா? மகாலட்சுமியின் வரம் வேணுமா? வீட்டில் பணம் தங்க இந்த பரிகாரத்தை செஞ்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் செல்வம் நிலையாகவே தங்கியிருக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. இதுகுறித்து சாஸ்திரங்களில் விரிவாகவே அறிவுறுத்தப்பட்டும் உள்ளது. அவைகளில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.

பெண்கள் அதிகாலையிலேயே படுக்கையை விட்டு எழுந்துகொள்ள வேண்டும்... அந்த நேரத்தில்தான், தேவர்களும், பித்துருக்களும் வீடு தேடி வருவார்களாம்.. காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால், லஷ்மி கடாட்சம் எப்போதும் கிடைக்கும்.

Vastu Tips Spirituality money Pariharam Spiritual news

மகாலட்சுமி: அந்தவகையில், எப்போதுமே காலையில் தூங்கி எழுந்ததுமே, வாசற்கதவை திறக்கும்போது, "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்ல வேண்டும்.. காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட்டால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

காலை வேளையை போலவே மாலை வேளைகளிலும், வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. விளக்கு வைத்த பிறகு குப்பைகூளங்களை வெளியே வீசக்கூடாது. இருட்டுவதற்கு முன்பதாக வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும். விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது. விளக்கு வைத்த பிறகு, தலைவாரவோ, பேன் பார்க்கவோ, முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.

அகல்விளக்கு: பால், தயிர், பச்சைக்காய்கறிகளை இரவில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. மாலையில் வீட்டில் விளக்கேற்றும்போது, வீட்டின் தலைவாசல் 2 புறமும் மணல் அகல்விளக்கு ஏற்றி வைப்பது நலன்பிறக்க வைக்கும்.. இது செல்வத்தை தரும் என்பதால், முன்னோர்கள் இதனை காலங்காலமாகவே கடைப்பிடித்து வந்துள்ளனர்.

வீட்டிலுள்ள பெண்களின் நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்க வேண்டும்.. வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்கூடாது. மூக்குத்தி, வளையல், மெட்டி போன்றவற்றையும் அணிந்திருக்க வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, அரிசியை தரையில் சிந்தக்கூடாது.

செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த நாட்களிலுமே ஒரு செம்பு தண்ணீரில் மஞ்சளை கரைத்து, வீட்டை சுற்றி தெளித்துவிட வேண்டும்.. இதனால் வீட்டை சுற்றிலும் துர்சக்திகள் நெருங்காது.. கண்திருஷ்டியும் நீங்கிவிடும். இந்த 2 கிழமைகளிலும், 5 முகம் கொண்ட குத்து விளக்கேற்றி திருமகளை வழிபட வேண்டும்...

அதேபோல, வீட்டிலுள்ளவர்கள் குங்குமம் இட்டுக்கொண்டு, வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும் குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமையன்று வீட்டிற்கு உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் என்பார்கள்..

வெள்ளிக்கிழமை: ஆனால், வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. அப்படியே யாருக்காவது பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்றுகொண்டு தரக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து பெறவோ, தரவோ வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+