Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவும்..மாட வீதிகளில் கபாலீஸ்வரரை காண குவிந்த மக்கள் கூட்டமும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலையே கயிலை..கயிலையே மயிலை என்று மக்களால் கொண்டாப்படும் மயிலாப்பூரில் இன்று அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளித்தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்ததை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் நான்கு மாட வீதிகளிலும் குவிந்திருந்தனர்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த கோவில்கள் இருந்தாலும் மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்கு என்று தனி சிறப்பு உண்டு. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கபாலீஸ்வரரை தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள்.

அத்தகைய சிறப்பு மிக்க கபாலீஸ்வரருக்கு சித்திரை முதல் பங்குனி மாதம் வரைக்குமே திருவிழாக்கள் நடைபெறும் என்றாலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 12 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும்.

களைகட்டிய மாட வீதிகள்

களைகட்டிய மாட வீதிகள்

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றப்பட்டு விட்டாலே மாட வீதிகள் களைகட்ட ஆரம்பித்து விடும் தினம் தினம் சாமி ஊர்வலம் காண பக்தர்கள் கூட்டம் வரும். குறிப்பாக அதிகார நந்தி, ரிஷப வாகன காட்சி, தேரோட்டம், அறுபத்து மூவர் விழா என முக்கியமான நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மயிலாப்பூருக்கு வருவார்கள். இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த வாரம் தொடங்கியது. கொடியேற்றம் தொடங்கிய நாள் முதலே மாட வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருவிழா கடைகள்

திருவிழா கடைகள்

கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது தற்காலிக கடைகள் முளைக்கும் அதுபோல மயிலாப்பூரில் ஆங்காங்கே சின்னச் சின்ன கடைகள் மாடவீதிகளில் ஆங்காங்கே தென்பட்டன. ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்வதற்காக நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக மாட வீதிகளில் வந்து விதம் விதமாக ரகம் ரகமாக பாசிகளை அலங்கார பொருட்களை விற்பனை செய்தனர்.

 கமர்கட்,தேங்காய் மிட்டாய்

கமர்கட்,தேங்காய் மிட்டாய்

தேங்காய் பூவில் செய்த கமர்கட், தேங்காய் பர்பி, பஞ்சுமிட்டாய், ஜவ்வு மிட்டாய் என கிராமத்து திருவிழாக்களில் காணப்படும் அபூர்வ வகை மிட்டாய்களை மயிலாப்பூர் மாட வீதிகளில் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்து வருவதை இந்த திருவிழா நாட்களில் மட்டுமே காண முடியும். நகரத்துவாசிகளுக்கு இந்த மிட்டாய்களின் அருமை தெரியாது என்றாலும் ஒருமுறை வாங்கி சுவைத்தவர்கள் மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வாங்கிக்கொண்டு செல்வது வழக்கம்.

சர்பத்,ரோஸ்மில்க் சுவையோ சுவை

சர்பத்,ரோஸ்மில்க் சுவையோ சுவை

இன்றைய தினம் கபாலீஸ்வரரை காணவும் 63 நாயன்மார்களை தரிசனம் செய்யவும் மக்கள் பல ஊர்களில் இருந்தும் மயிலாப்பூருக்கு வந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக ஆங்காங்கே ஐஸ் சர்பத், மசாலா நீர்மோர், குல்பி ஐஸ், ரோஸ்மில்க், பழ ரசங்கள் என குளிர்ச்சியான பானங்களை தானமாக கொடுத்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே காய்கறி சாதம், சாம்பார் சாதம், கலவை சாதம் என பக்தர்களுக்கு அன்னதானமும் செய்தனர்.

சிவபக்தரின் மகள் பூம்பாவை

சிவபக்தரின் மகள் பூம்பாவை

அறுபத்து மூவர் திருவிழாவின் முக்கிய அம்சமாக அங்கம்பூம்பாவைக்கு உயிர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கும் ஒரு புராண கதை உள்ளது. சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார். விஷ நாகம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்துவிடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள். சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அறுபத்து மூவர் திருவிழா

அறுபத்து மூவர் திருவிழா

மாலையில் வெள்ளி விமானத்தில் இறைவன் கபாலீஸ்வரர் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது. கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், மூலவர்கள் வலம் வந்தனர். இதை மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.

கபாலீஸ்வரர் கரம் பிடித்த கற்பகாம்பாள்

கபாலீஸ்வரர் கரம் பிடித்த கற்பகாம்பாள்

ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+