Navratri Day 2: நவராத்திரியின் 2ஆவது நாள் இன்று! ராஜராஜேஸ்வரியை ஏன் வணங்க வேண்டும்?
சென்னை: நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இன்று ராஜராஜேஸ்வரிக்கு உகந்த நாள் என்கிறார்கள். இன்றைய தினம் என்னென்ன நைவேத்தியம் செய்து வழிபடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசியில் வரும் நவராத்திரி குறித்துதான் நமக்கு தெரியும். ஆனால் 4 நவராத்திரிகள் இருக்கின்றனவே, உங்களுக்கு தெரியுமா? பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகா வாராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகியவைதான்.

இந்த 4 நவராத்திரிகளையும் முறையாகக் கடைபிடித்தால் பெண்களுக்கு அம்பிகையின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். நவராத்திரி நேற்று 22ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் முடிவடைகிறது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என முப்பெரும் சக்திகளாக வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரியின் இரண்டாம் நாளான துவிதியை திதி, செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று சிவனை பெற தவம் செய்த பராசக்தியின் வடிவமான பிரம்மசாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். அது போல் பக்தர்கள் சிவப்பு நிறத்தினாலான மலர்களை கொண்டு பூஜிப்பது, வண்ண கோலங்களிடுவது என அம்மனுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
வயதுக்கு வராத சிறுமிகளை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். அவர்களுக்கு பாத பூஜை செய்து மங்கள பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும். மகிஷாசுரனை வதம் செய்த நாள் இந்த இரண்டாவது நாள்! மகிஷாசுரனை தனது சூலத்தால் வதம் செய்தாள். இதனால் தேவர்களும் ரிஷிகளும் மகிஷாசுரமர்த்தினிக்கு நன்றி தெரிவித்தனர்.
ராஜ ராஜேஸ்வரியை வழிபடுவோரை பில்லி, சூனியம், ஏவலால் கட்டுப்படுத்தவே முடியாது. ராஜ ராஜேஸ்வரியை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டு வாசலில் வந்து அருள்புரிவார்கள். ராஜ ராஜேஸ்வரியை வழிபட்டால் தோல்வி என்பதே கிடையாது, அரச போக வாழ்க்கை கிடைக்கும். அரசர்களும் அவர்களுடைய பேச்சுக்கு தலையாட்டுவார்கள். அதனால்தான் அவள் அரசருக்கு எல்லாம் அரசி.
வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருந்தால் இந்த ராஜ ராஜேஸ்வரியை 48 நாட்கள் வழிபாடு செய்தால் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும். மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சர்க்கரை பொங்கல், கேசரி செய்து நைவேத்தியம் செய்து வழிபடலாம். கடைகளில் வாங்கி வழிபடுதல் கூடாது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications