பழனி முருகனுக்கு 15 டன் பஞ்சாமிர்தம் கொடுத்த எடப்பாடி பக்தர்கள்.. வள்ளிக்கு பாரம்பரியமாக வந்த சீதனம்
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயார் செய்து விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். வள்ளிக்கு பாரம்பரிய வழக்கப்படி பழங்குடியின மக்கள் மேளதாளங்கள் முழுங்க, ஆட்டம் பாட்டத்துடன் சீதனம் கொண்டு வந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, முருகனை வழிபட்டுச் சென்றனர்.

தைப்பூசத் திருவிழா முடிவடைந்த பின்னரும் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அவ்வாறு வரும் பக்தர்களில், பழநி மலைக் கோயிலில் ஒரு நாள் இரவு தங்கி வழிபட்டுச் செல்லும் உரிமை பெற்றவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவதராஜகுல திருவிழாக் குழுவினர்.
பழனி தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி பருவத ராஜகுல தைப்பூச காவடிகள் சிறப்பானது. எடப்பாடி நகரத்தில் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகை மாலைகள், கடலை, சர்க்கரை, மாவு உள்ளிட்ட வகைகளை படைத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
கணபதி கவுண்டர் என்பவரிடம், முதியவர் வேடத்தில் முருகன் வந்து ஆதி காவடியை கொடுத்து பழனி மலைக்கு வழிகாட்டி சென்றதாகவும் இந்த காவடிதான் எடப்பாடியில் இருந்து பழனி மலைக்கு எடுத்துச் சென்ற முதல் காவடி என்று கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் வலசைபழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, க.புதூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர் 250 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாக வந்தனர். எடப்பாடி மக்களின் பாதயாத்திரையின்போது அவர்களுடன் முருகனும் சேர்ந்து பயணிப்பதாகவும் நம்பிக்கை. சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில் காவடி, இளநீர் காவடிகளுடன் காவிநிற ஆடை அணிந்து உற்சாகமாக வந்தனர்.
மலைக்கோயிலில் தங்கி சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் மலையை மலர்களால் அலங்கரித்து ஆட்டம் பாட்டம் என பழனியை அமர்களப்படுத்தினர். கடந்த 366 ஆண்டுகளுக்கு மேலாக பருவத ராஜகுல காவடி குழுவினர் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
பழனி முருகன் கோயில் மலை மீது தங்கிய எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள், படி பூஜை, மலர் வழிபாடு செய்து முருகனை வழிபட்டனர். 10 டன் மலை வாழைப்பழம், 10 டன் சர்க்கரை, 900 கிலோ பேரீட்சை, 75 கிலோ கற்கண்டு, 20 டின்களில் நெய், தேன், ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர்.
பிப்ரவரி 1ஆம் தேதியன்று இரவு மலைக் கோயிலில் தங்கியிருந்து பஞ்சாமிர்தத்தை முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த வழக்கம் 366 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அபிஷேகம் செய்த பிறகு பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
இதே போல முருகப்பெருமான் மணம் புரிந்து கொண்ட குறவர் இன பெண்ணான வள்ளிக்குப் பிறந்த வீட்டுச் சீதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த குறவர் இன மக்கள், பழநியில் ஒன்றுகூடினர். தொடர்ந்து, குறமகள் வள்ளிப் பெருந்தகை பாசறை சார்பில், தங்களது பாரம்பரிய வழக்கப்படி ஆதிவாசி, வள்ளி, தெய்வானை, முருகன் வேடமிட்டு, மேளதாளங்கள் முழுங்க, ஆட்டம் பாட்டத்துடன் சீதனம் கொண்டு வந்தனர்.
தேன், திணை மாவு, மா, பலா,வாழை உள்ளிட்ட பழ வகைகள், கிழங்குகள், வில் அம்பு, வேல் உள்ளிட்ட சீதனங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மலைக்கோயில் செல்லும் வழியில் உள்ள வள்ளி சுனையில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்துவிட்டு, தாங்கள் கொண்டு வந்த சீதனங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, கேரளமாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களும், வள்ளிக்கு தாய் வீட்டுச் சீதனம்கொண்டு வந்தனர். தைப்பூசம் திருவிழா முடிந்த பின்னரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் பழனி நகரமே பரபரப்பாக உள்ளது. எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications