திருப்பதி ரத சப்தமி.. 7 வாகனங்களில் மலையப்பசுவாமி வீதி உலா.. பக்தர்களுக்கு குட் நியூஸ்
திருப்பதி: ரத சப்தமி விழா திருமலை திருப்பதியில் நாளை 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வீதி உலா வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர். மினி பிரம்மோற்சவம் போல நடைபெற உள்ளதால் பூலோக வைகுண்டமாக மாறியுள்ளது திருமலை.
சூரியபகவான் தை மாதம் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். சூரிய ஜெயந்தி விழா ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி நாளன்று கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ஒரு சில மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது.

ரதசப்தமி நாளில் நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும்.
இந்த நிலையில் ரத சப்தமி தினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடும் வழக்கம் வைஷ்ணவ கோவில்களில் உள்ளது. திருமலை திருப்பதியில் ரத சப்தமி நாளன்று ஒருநாள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இந்த நாளில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அதிகாலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மலையப்ப சுவாமி காலை 05.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 முதல் 2 வரை அனுமந்த வாகனத்திலும் உலா வருவார். பகல் 2 முதல் 3 வரை சக்கர ஸ்நானமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பவிருட்ச வாகனத்திலும் உலா வருவார் மலையப்பசுவாமி.
மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், கடைசியாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி. அனைத்து வாகன சேவைகளும் SVBC சேனலில் உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்களுக்காக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக விஐபி தரிசனம் தவிர, மற்ற விருப்ப தரிசனங்களான மூத்த குடிமக்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவை பிப்ரவரி 16ம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை ஸ்ரீவாரி சர்வ தரிசன டோக்கன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சுவாமி தரிசனம் செய்ய வரும் சாமானிய பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் காத்திருப்பு அறைகளில் நிறுத்தி வைக்கப்படாமல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2 வழியாக நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
ரூ.300 சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் தங்களுக்கான நேரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் அவர்களும் வைகுண்டம் 2 வழியாக மட்டுமே டைம் ஸ்லாட் ஏதும் இன்றி நேரடியாக சுவாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஒரு நாள் பிரம்மோற்சவ வைபவமான ரதசபதமியை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏகாந்தத்தின் போது நடைபெற உள்ளன.
ரதசப்தமியை முன்னிட்டு திருமலை கோவில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது. ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகள் குளுமையாக இருக்கும் வகையில் பெயிண்ட்களால் அழகாக வண்ணமிகு ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டுள்ளன.
பக்தர்களின் பசி, தாகத்தை போக்குவதற்காக காலை முதல் இரவு வரை சாம்பார் சாதம், பொங்கல், புளியோதரை ஆகியவற்றுடன் மோர், குடிநீர், டீ, காபி, பால் போன்றவைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications