சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் சிவப்பு நிற சேலை! என்ன நடக்கும்? சிவாச்சாரியார்கள் சொல்வது என்ன?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் சிவப்பு நிற புடவையை வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவு வந்ததை அடுத்து சிவாச்சாரியார்கள், கோயிலில் பூ போட்டு கேட்டதன் பேரில் அது உண்மை என தெரியவந்தது. இதனால் ஜவுளித் துறையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்து உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாக பயன்படுத்திய போது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும் வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம் முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடி கொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார்.
இவர் இங்குள்ள முருகனை தரிசனம் செய்துவிட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது. முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்ட போது கவுதம மகரிஷி முனிவரிடம் சென்ற போது அவர் உடல் உபாதையை தீர்க்கும் படி வேண்டினார்.
சிவன்மலை முருகனை வணங்கினால் வியாதி தீரும் என கவுதம மகரிஷி சொன்னதை அடுத்து முனிவர் கூறியது போல் முசுகுந்தனும் சிவன்மலை முருகனை தரிசித்ததை அடுத்து அவரது நோயும் தீர்ந்தது. திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்ப என அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும்.
இங்குள்ள நவக்கிரகங்களை வழிபட்டு 9 முறை சுற்றி வந்தால் பிரச்சினைகள் தீரும். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து இங்கு வந்து பூஜை செய்தால் காய்ச்சல் நீங்கும் என்பது ஐதீகம். சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது.
பக்தர்கள் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிப்பது வழக்கம். இதற்காக முருக பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருட்களை பூஜை செய்து பின்னர் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள தூணில் இருக்கும் கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
இது போல் வைக்கப்படுவது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். இந்த பொருள் தேசிய அளவில் ஏற்றமும் இறக்கமும் பெறுவதற்கான குறியீடாக இருக்கும். சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொருட்களை வைக்கப்படும்.
அந்த வகையில் நேற்றைய தினம் சிவன்மலை உத்தரவு பெட்டியில் சிவப்பு நிற புடவை வைக்குமாறு கனவில் வந்ததை அடுத்து அந்த பொருள் பூஜை செய்யப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரணம் கிராமம் சிவக்குமார் (30) என்ற பக்தரின் கனவில் சிவப்பு நிற புடவை வைக்க உத்தரவு வந்தது. இதையடுத்து சிவன்மலை முருகரிடம் பூசாரி பூப்போட்டு கேட்டார். உத்தரவு வந்ததும் நேற்று முன் தினம் முதல் அந்த புடவையை வைத்து பூஜை நடத்தப்பட்டது.
இதனால் ஜவுளி விலை, உற்பத்தியில் மாற்றம் வரும் என்றும் இதன் தாக்கம் போக போகத்தான் தெரியம் என்றும் கோயில் அர்ச்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன்பு சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது.
மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது. மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோது கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இப்படி இங்கு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications