சபரிமலை ஐயப்பன் கோயில் நடைத் திறக்கும் போது விளக்கு அணைந்து, விபூதி கொட்டி! காண கிடைக்காத அதிசயம்!
பத்தினம்திட்டா: சபரிமலையில் நடைத் திறக்கும் போது சில அதிசயங்கள் நிகழும். இதை சிலர் பார்த்து மெய்சிலிர்த்திருக்கிறார்களாம். சபரிமலை ஐயன் எண்ணற்ற அற்புதங்களை தனது பக்தர்களுக்கு நடத்திக் கொண்டுதான் வருகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுதோறும் 5 முறை மட்டுமே திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு பலர் மாலை அணிந்து இருமுடி கட்டி வருகிறார்கள். இவ்வாறு பக்தியுடன் வரும் பக்தர்களை வாழ்வில் சிறந்தவர்களாக்குகிறார் ஐயப்பன்.

ஐயப்பன் அருள் கிடைத்தால் அனைத்தும் கிடைத்துவிடும். இந்த கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மகர ஜோதிக்கு போய் ஐயனை தரிசிப்பார்கள்.
இதுகுறித்து World of Priyalakshmanan என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் ஸ்ரீஐயப்யன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் நடை திறக்கும் போது சில அதிசயங்கள் நிகழும். அதை சிலர் பார்த்திருக்கிறார்கள்.
சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் நடை சாத்துவதற்கு முன்பு சுவாமி ஐயப்பன் மீது பசுஞ்சாண விபூதியை சாத்துவார்கள். சுவாமி ஐயப்பனின் சின் முத்திரை மீது ருத்ராக்ஷ மாலையும் வைப்பார்கள். இதற்கு காரணம் சுவாமி ஐயப்பன் அடுத்து நடைத் திறக்கும் வரை தவக்கோலத்தில் இருப்பார்.
சுவாமி ஐயப்பனின் கையில் ஒரு தண்டம் வைப்பார்கள். அவர் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நடையை சாத்திவிடுவார்கள். அடுத்த மாதம் நடைத் திறக்கும் வரை அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கும். அந்த விளக்கிற்கு ஒரு மாதமாக எண்ணெய் அல்லது நெய் எப்படி கிடைத்தது என்பது மர்மமாகவே இருக்கிறது.
கோயிலோட நடைத் திறந்து உலகத்தோட பார்வை அந்த கோயில் மீது பட்டவுடன் ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடும், அடுத்த நிமிடமே அந்த விளக்கு அணைந்துவிடுமாம். ஐயப்பன் கை மீது போட்ட அந்த தண்டமும் கை மாறி இருக்கும். இந்த அதிசயம் ஒவ்வொரு மாதமும் நடைத்திறக்கும் போது நடந்துக் கொண்டு இருக்கிறது.
சுவாமி ஐயப்பன் சபரிமலையில் தவக்கோலத்தில் உயிர்ப்புடன்தான் இருக்கிறார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதத்தை தான் பார்த்ததாக பாடகர் வீரமணி தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இது போன்ற ஐயனின் அற்புதத்தை பார்க்க பலர் தவம் இருக்கிறார்கள்.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த சன்னதியை அடைய இரு வழிகள் உள்ளன. பெரு வழி பாதை, சிறு வழி ஆகியவை ஆகும். இது 75 கி.மீ. தூரம் கொண்டதாகும். பம்பையில் இருந்து 7 கி.மீ. தூரம் கொண்டது சிறு வழி பாதை. இந்த பாதையை 4 அல்லது 5 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் 4 வழிகளில் சென்றாலும், பெரும்பாலும் செங்கோட்டை-புனலூர் வழியாக பட்டனம்திட்டா சென்று அங்கிருந்து பம்பை செல்வதையே விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications