சன்னதியில் கட்டும் கட்டி.. இனி பம்பையிலேயே ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டலாம்! அதுவும் கம்மி செலவில்!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பம்பையிலேயே பக்தர்கள் 24 மணி நேரமும் குறைந்த செலவில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
பொதுவாக சபரிமலை யாத்திரையை துவங்கும் பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே உறவினர்கள் முன்னிலையில் இருமுடி கட்டி பம்பைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் அவசரமாக சபரிமலை பயணம் மேற்கொள்பவர்கள் இருமுடி கட்டாமல் மலைக்கு செல்கின்றனர். அதே நேரத்தில் இருமுடி கட்டிய பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே 18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பம்பையிலே மிகக் குறைந்த செலவில் 24 மணி நேரமும் இருமுடி கட்ட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்கள் பம்பையிலே படி ஏற்றத்திற்கு அருகே விநாயகர் கோவில் சன்னதியில் இருமுடி கட்டிக் கொள்ளலாம்.
இதற்காக 300 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டால் அங்கு இருக்கும் பூசாரிகள் இருமுடி கட்டி பக்தர்களின் தலையில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். மேலும் இங்கு கட்டப்படும் இருமுடியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காது. ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து இருமுடி கட்டிக் கொள்ளலாம் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications