சபரிமலை சீசன்.. தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை: தமிழக கேரளா எல்லையான புளியரையில் விடிய,விடிய ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சபரிமலையில் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலையில் கேரளா எல்லையிலேயே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பக்தர்கள் தவித்து போயினர்.
பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை விழாவிற்காக ஆண்டுத்தோரும் கார்த்திகை 1ம் தேதிமுதல் மாலை அணிந்து, விரதமிருந்து நாடெங்கிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜை சீசன் காலம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.

தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரைக்கும் சுமார் 18 லட்சம் பேர் தரிசனம் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். வருமானமும் பலகோடி ரூபாய் கிடைத்துள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பல பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்யாமலேயே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழக எல்லாப் பகுதியான குமுளி,செங்கோட்டை புளியறை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விடிய,விடிய சென்று வருகின்றன. நேற்று இரவு சுமார் 11மணிமுதல் திடீர் என ஆரியன்காவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் ,கேரளாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் இருபகுதிகளிலும் தேக்கம் அடையத் தொடங்கியது. இதனால் இரண்டு பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் சபரிமலை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சபரிமலை செல்லும் சாலையிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் சன்னிதானம் சென்று 18 படியேறி ஐயபபனை தரிசனம் செய்வது எப்படி என்று ஐயப்ப பக்தர்கள் யோசித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications