For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிபகவான் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதா... கோபப்பார்வையில் இருந்து தப்பிக்க பத்து வழிகள்

சனிபகவான் பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். அதற்குக் காரணம் ஏதேனும் கெடுதல் நடந்து விடுமோ என்ற அச்சம்தான். சனி பகவானின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்க இந்த பத்து விசயங்களை ஃபாலோ செய்வது நல்லது.

Google Oneindia Tamil News

சென்னை: சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பாதிப்பு அதிகம். சனிபகவானின் பார்வை பலத்தால் ஒருவர் ராஜாவாக உயரும் அந்தஸ்தை பெறுவார். அதே நேரத்தில் தவறு செய்பவர்களை கோபப்பார்வை பார்த்து ஒன்றும் இல்லாத ஆண்டியாக்கி தலையில் தட்டி அமர வைத்து விடுவார். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனியால் அவதிப்படுபவர்களும் சனிபகவானின் பார்வையால் பாதிப்புக்கு உள்ளாகும் ராசிக்காரர்களும் இந்த பத்து விசயங்களை கண்டிப்பாக கடைபிடிங்க... சனியின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம்.

சனிக்கிழமை சிவ ஆலயம் சென்று சனிபகவானை ஸ்பெஷலாக சிலர் வழிபடுவார்கள். அதற்குக் காரணம் சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

சனி பகவானைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். அதாவது சனி பகவான் தான் விரும்பியவருக்கு ஏராளமான நற்பலன்களை வாரி வழங்கக்கூடியவர். ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனிபகவான்.

தலைமை நீதிபதி சனிபகவான்

தலைமை நீதிபதி சனிபகவான்

சனி பகவான் நீதிமான் என்பதால் ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கியே தீருவார். நல்ல மனதோடு அவரை வழிபாட்டால் நற்பலன்களை அதிகம் பெறலாம். அதே நேரத்தில் கெடுதல் செய்பவர்களுக்கு அதற்கான தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும். ஒருவர் செய்த தவறுக்கும், பாவங்களுக்குமான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் நியதி. எனவேதான் சனிபகவானை தலைமை நீதிபதி என்று அழைக்கின்றனர்.

ஏழரை சனி பிடித்தால் என்ன பாதிப்பு

ஏழரை சனி பிடித்தால் என்ன பாதிப்பு

ஒருவரின் ராசிக்கு 12ஆம் இடம் ஜென்ம ராசி, இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது ஏழரை சனி பிடிக்கிறது. ஏழரை சனி காலத்தில் நல்லவர்களுக்கு நல்லதே நடைபெறும் அதே நேரத்தில் கெடுதல் செய்பவர்களுக்கு செல்வம், செல்வாக்கும், குடும்பம் என அனைத்தையும் இழக்க வைத்து அவரின் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுவோமா என நினைக்கக் கூடிய அளவிற்கு துன்பத்தை தந்து விடுவார் சனிபகவான்.

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சனி பகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை.. கொடுப்பவரும் இல்லை என்ற சான்றோர் வாக்கை சரியாக புரிந்து கொண்டவர்கள் எவரும் இப்படி அச்சம் கொள்ள மாட்டார்கள். என் பார்வை பிடியிலிருந்து தப்பிக்க, கெடுபலன் குறைய அகங்காரத்தை விடுத்து, நேர்மையாக, தங்களின் வேலையை சரியாக செய்து வந்தாலே போதும் என்கிறார் சனிபகவான்.

சனிபகவானை எப்படி வழிபடுவது

சனிபகவானை எப்படி வழிபடுவது

நவ கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேரில் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும். எனவே தான் 'சனியை சாய்வாய் நின்று வழிபடு' என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார்.

தவறு செய்தால் திருத்துவார்

தவறு செய்தால் திருத்துவார்

சனிபகவான் தண்டிக்கும் தெய்வம் மட்டுமல்ல தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்து அவரை நல்வழிப்படுத்துவார். எனவே ஏழரை சனி காலத்தில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு எண்ணங்களையும் செயல்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். தீய எண்ணங்களை மனதில் இருந்து அகற்றி, நல்ல செயல்களை அதிகம் செய்ய வேண்டும்.

நல்லெண்ணெய் அபிஷேகம்

நல்லெண்ணெய் அபிஷேகம்

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனிபகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்னர் சனி பகவானின் கவசத்தை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனிபகவான் வழங்குவார்.

காகத்திற்கு சாதம் கொடுங்கள்

காகத்திற்கு சாதம் கொடுங்கள்

வலம்புரி சங்குள்ள வீடு சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் கஷ்டம் கொடுப்பதில்லை. சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமானது.
கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் கொண்டு இறைவனை பூஜிப்பவர்களை சனி எதுவும் செய்யமாட்டார்...அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. காகத்திற்கு எள் கலந்த வைத்து வழிபடுபவர்களை சனி பகவான் நெருங்குவதே இல்லை.

அசைவம் சாப்பிடக்கூடாது

அசைவம் சாப்பிடக்கூடாது

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். அனுமனை வழிபடலாம். சனிபகவானின் குருவான கால பைரவரை வழிபட பாதிப்புகள் குறையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம். சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

பச்சரிசி பரிகாரம்

பச்சரிசி பரிகாரம்

வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். விநாயகர் கோவிலுக்கு சென்று பச்சரிசி பொடியை தூவி வழிபட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும். நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

English summary
Sani peyarchi palan and parikaram: (சனி பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்) Those who suffer from Ezharai Sani, Ashtama Sani, Kandasani and those who are affected by the vision of Sani must strictly adhere to these ten things ... to escape from the angry gaze of Saturn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X