கந்தனுக்கு அரோகரா..சஷ்டியில் இருந்தால் ’அக’பையில் வரும்! கந்த சஷ்டியில் மிளகு விரதம் என்றால் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் தம் முழு முதற்கடவுளான முருகப்பெருமானை வழிபடுவதற்கு சிறந்த நாட்களில் கந்தசஷ்டி விரதம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது ஐப்பசியில் வரும் மகா சஷ்டி விரதத்தை பக்தர்கள் மேற்கொண்டு வரும் நிலையில், விரதத்திற்கான விதிமுறைகள் என்னென்ன? என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்..

தமிழ் மாதங்களில் அனைத்து மாதங்களிலும் சஷ்டி திதி வருகிறது. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதி மகா சஷ்டியாகவும் கந்த சஷ்டியாகவும் பார்க்கப்படுகிறது.

spirituality kandha sashti lord murugan

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் உண்மையில் அது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கருப்பையில் கிடைக்கும் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

அந்த வகையில் கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் திருமண தடை நீங்கி, உடல் நலம் பெருகி, படிப்பு கிடைத்து, குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டியில் தன்னை நோக்கி விரதம் இருப்பவர்களுக்கு கேட்கும் அனைத்தையும் தருபவர் தான் முருகப்பெருமான். அப்படி விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது எக்காரணம் கொண்டும் காலையில் தூங்கக் கூடாது. உடல் நலனை பொறுத்து விரத நாட்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஒருவேளை உணவு சாப்பிட்டு இரண்டு வேளை விரதமும், இரண்டு வேளை சாப்பிட்டு ஒருவேளை விரதமும் கூட கடைபிடிக்கலாம். மூன்று வேலையும் விரதம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சுவாமிக்கு படையல் செய்த பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம்.

விரதத்தின் போது நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் மிளகு மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள் அது மிளகு விரதம் என அழைக்கப்படுகிறது. முதல் நாள் ஒருமிளகு அடுத்த நாள் இரண்டு மிளகு என ஏழு நாட்களுக்கு மிளகு மட்டுமே சாப்பிடுவார்கள். உடல் நலன் பாதிக்கும் என அச்சப்படுபவர்கள் உப்பு இல்லாத பால் சாதம் தயிர் சாதம் ஆகியவற்றை சாப்பிடலாம்.

காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு அரிசி பருப்பை தவிர்க்கலாம். விரதம் இருக்கும் ஏழு நாட்களும் காப்பு கட்டி விரதம் இருப்பது அவசியம். ஏழு நாட்களுக்கும் முருகனை வழிபடுவதும் அவசியம். முதல் நாள் மட்டும் காலை 4 மணிக்கு எழுந்து விரதத்தை தொடங்க வேண்டும். கைகளில் மஞ்சள் நூலை காப்பு கட்டி முருகனுக்கு காய்ச்சிய பால் தேன் வெற்றிலை ஆகிவற்றை வைத்து வழிபட்டால் கேட்பவர்களுக்கு கேட்ட வரம் தருபவர் முருகப்பெருமான். முடிந்தவரை விரதம் இருக்கும் நாட்களில் யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது இதனால் உங்கள் சக்தி உங்களுக்குள்ளேயே கிடைக்கும்.

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில், பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். கந்த சஷ்டி விழா, ஆவணித் திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த கந்த சஷ்டி விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் திருச்செந்தூர் வருகை தந்து ஆறு நாட்கள் விரதம் இருப்பார்கள். இந்த நிலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது.

கோவில் பிரகாரத்தில் உள்ள யாகசாலைக்கு காலை ஐந்து முப்பது மணிக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார்.கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வருகின்றனர். முன்னதாக அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை உடை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகின்ற ஏழாம் தேதி கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+