பூஜையறையில் பித்தளை பாத்திரங்களை வைக்கலாமா? பித்தளையில் விளக்கு நல்லதா? செம ஸ்பெஷல்
சென்னை: விளக்குகளில் பலவிதம் இருக்கின்றன.. ஆனாலும், பித்தளையில் தயாரிக்கப்படும் விளக்கு தான் மிகவும் சிறந்தது என்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பித்தளை விளக்குகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
சமீப காலங்களில், எவர்சில்வர் விளக்கு, டிசைன் விளக்குகள் வந்துவிட்டன.. ஆனால், அந்த காலத்தில் பித்தளையில் செய்த விளக்கைதான் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்..

மணப்பெண்ணுக்கு சீர்வரிசை தருவதானாலும் பித்தளை பாத்திரங்களையே பெரும்பாலும் வழங்கியிருக்கிறார்கள்.. இதற்கு ஆன்மீகக் காரணம் மட்டுமல்ல, ஆரோக்கிய காரணமும் உள்ளது..
செரிமானம், நோயெதிர்ப்பு அமைப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு பித்தளைகள் பயன்படுகின்றன.. பித்தளையில் லேசான தாமிரம் கலந்து தயாரிக்கப்படும் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, நம் உடலிலுள்ள உஷ்ணங்கள் நீங்கி, உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் கிடைக்கின்றன. அதனால்தான் பித்தளை சொம்பில் தண்ணீர் குடித்து வந்தார்கள்.
விளக்குகள்: அதேபோல, ஆன்மீகத்திலும் பித்தளைகளுக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளன.. மாலை வேளையில் விளக்கேற்றுவதற்கும்சரி, விசேஷ நாட்களில் விளக்கேற்றுவதற்கும்சரி, விழாக்காலங்களிலும்சரி, திருமணம் போன்ற சடங்குகளிலும்சரி, பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்த வேண்டுமாம்.
இதற்கு காரணம், பித்தளை லட்சுமி விளக்கு, லட்சுமி தேவியின் அருளையும் செழுமையையும் குறிப்பதாகும்.. அனைத்து கடவுளுக்கும் மிகவும் பிடித்தமான உலோகம் பித்தளைதான். பித்தளை விளக்குகள் மென்மையான பிரகாசத்தை வெளியிடக்கூடியவை.. பித்தளை விளக்குகள் அலங்கார உறுப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
பித்தளை பாத்திரம்: கடவுள் வழிபாட்டுக்கும், பித்தளையை பயன்படுத்த வேண்டும். அல்லது வெண்கலம் பயன்படுத்தலாம். பித்தளையை பொறுத்தவரை ஒரு சாத்விக் உலோகமாகும்.. தூய்மையின் மறுவடிவமாக கருதப்படுகிறது.. பூஜை பாத்திரங்களையும் பித்தளையில் பயன்படுத்தினால் நேர்மறை ஆற்றல் பெருகும். இணக்கமான சூழலை பித்தளைகள் உருவாக்கக்கூடியவை. பித்தளையால் பூஜை பொருட்களை இருந்தாலே, பூஜையறையே நிறைந்ததுபோல திருப்தி கிடைக்கும்.
பித்தளை விளக்குகள், தட்டுகளை, பெரும்பாலும் புளி, எலுமிச்சை, டிடர்ஜென்ட், கடலை மாவு, வினிகர் போன்றவற்றின் மூலம் சுத்தம் செய்வார்கள். எனினும் அதில் கறைகள் நீங்காமல் இருந்தால், தக்காளியை பயன்படுத்தலாம்.
தக்காளி கெச்சப்: பித்தளை பாத்திரங்களை நீரில் நனைத்ததும், அதன்மீது தக்காளியால் நன்றாக தேய்த்து பிறகு விளக்கை கழுவினால், அதிலுள்ள கறைகள் நீங்கும். அல்லது தக்காளி சாற்றில் 30 நிமிடம் ஊற வைத்தும் கழுவலாம். அல்லது தக்காளி கெட்ச்அப்பை வைத்தும் பித்தளையிலுள்ள கறைகளை நீக்கலாம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications