சமையலறையில் இந்த பொருள் முக்கியம்.. கல் உப்பு பரிகாரம் அவசியம்.. யோகம் பிறக்க செய்யும் கல்லுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் கடுமையாக உழைத்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும், பணம் கொஞ்சமும் கையில் தங்குவதில்லை.. அத்துடன் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையும் பெருகிவிடுகிறது.. இதுபோன்ற இன்னல்களுக்கு, சாஸ்திரங்களில் ஏராளமான தீர்வுகளும் எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

ஏராளமான ஆண்டிபயாடிக் சக்தி நிறைந்த கல் உப்புகள்.. சருமத்தை சுத்தப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும் கல் உப்பு உதவுகிறது.. எனவே உப்பு நீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.

Spirituality Kal uppu rock salt

நன்மைகள் - மருத்துவம்

அதேபோல செரிமான அமைப்பை மேம்படுத்த கல் உப்பு உதவுகிறது . இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்கிறது.. கிருமிகளை கொல்லும் தன்மை அளவுக்கு அதிகமாகவே கல் உப்புக்கு உண்டு.. தொண்டை புண் அல்லது பல் வலிகளுக்கு கல் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பது நிவாரணம் தரும்.

அதேபோல கல் உப்பு என்பது ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று... காரணம், கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் தன்மை கொண்டது..

எதிர்மறை ஆற்றல்கள், துஷ்ட சக்தி, திருஷ்டியை விலக்க, ஒரு கைப்பிடி உப்பு இருந்தாலே போதும் என்பார்கள்.. இதைவைத்தே எளிய பரிகாரங்களும் செய்யப்படுகின்றன..

காய்ந்த மிளகாய்

உதாரணத்துக்கு ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, எலுமிச்சம்பழத்தை அதன் நடுவிலும், 4 காய்ந்த மிளகாயை பாத்திரன் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைக்க வேண்டும்.

கல் உப்பு, மிளகாயின் கூர்மையான பகுதிகள், இவை இரண்டுமே எதிர்மறை சக்திகளை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டதாகும். 7 நாட்களுக்கு ஒருமுறை இந்த கல் உப்பினை மாற்றி, புதிதாக வைக்க வேண்டும். பழைய கல் உப்பு மிளகாயை மனிதர்கள் கால் படாத இடத்தில் வீசிவிட வேண்டும்.

அதேபோல கிண்ணம் ஒன்றில் கல் உப்பை நிரப்பி கொண்டு, வீட்டு வாசலில் வைத்துவிட வேண்டும். இதனால், குடும்பத்தினர் மீதுள்ள திருஷ்டிகள் கழிந்துவிடும். கல் உப்பு போலவே, இந்துப்பையும் வாங்கி வைக்கலாம்..

வீட்டு வாசலில் முடிச்சு

வீட்டில் தீய சக்தியை, எதிர்மறை ஆற்றல் விலக வேண்டுமானால், வீடு துடைக்கும்போது, அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு துடைப்பது நல்லதாகும். சிவப்பு துணியில் கல் உப்பை கட்டி, முடிச்சு போல கட்டி வாசலில் தொங்கவிடலாம்... இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் அண்டாது..

இரவு தூங்குவதற்கு முன்பு, கல் உப்பை கண்ணாடி டம்ளரில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.. இந்த டம்ளரை நீங்கள் தூங்கும் இடத்திற்கு பக்கத்திலேயே வைத்து, பிரார்த்தித்து இரவு தூங்க செல்ல வேண்டும்.. மறுநாள் இரவும் இதுபோல கல் உப்பு நீரை வைத்து கொள்ளலாம்.

அப்போது முந்திய நாள் கல்உப்பு நீரை, பாத்திரம் கழுவும் சிங்கில் கொட்டிவிடலாம். தொடர்ந்து 10 நாட்கள் இப்படி நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கல் உப்பு தீபம்

அதேபோல, கல் உப்பு தீபம் ஏற்றி வைத்தால், குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். முக்கியமாக பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை விரைவில் நீங்கும்.. அதாவது 48 நாட்களுக்குள் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பார்கள். ஆனால், கல் உப்பு தீபம் ஏற்றும்போது, நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும்.

1 ரூபாய் நாணயம்

பெரும்பாலும், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பினை வாங்கி, கிச்சனில் வைக்கலாம். இந்த உப்பில் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து பிரார்த்தித்து வருவதால் பணக்கஷ்டம் தீரும்.

சமையலறையில், சமைக்கும்போது அருகிலேயே உப்பு இருக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் என்பதால், உப்பு ஜாடியின் மீதுகூட அழுக்கு படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். அழுக்கு படியாத கைகளில்தான் உப்பு எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உப்பு ஜாடியை கழுவக்கூடாது. எனவே வெள்ளி மற்றும் செவ்வாய்களில் உப்பு ஜாடியை கழுவலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+