இத்துனூண்டு துண்டு படிகாரம் போதும்.. மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், பணத்தை அள்ளிதரும் படிகாரத்தின் பரிகாரம்
சென்னை: மருத்துவ குணங்கள் ஏராளமாக அடங்கியிருக்கும் படிகார கற்கள், ஆன்மீகத்தில் எப்படி பயன்படுத்தப்படுகின்றன.. இந்த படிகார கற்களை வைத்து பரிகாரங்கள் செய்ய முடியுமா? திங்கட்கிழமைகளில் செய்யப்படும் படிகாரம் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
கால்சியம் சத்துக்களை அதிகமாக கொண்ட படிகார கற்கள், அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் இந்த கற்களுக்கு உள்ளன. குடிநீரை சுத்தப்படுத்துவதற்காக கிராம மக்கள் இன்றும் இந்த படிகாரத்தைதான் பயன்படுத்துகிறார்கள்.

தொற்றுகள்: தொற்றுகள் அதிகம் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் பாத விரல் புண்களுக்கு படிகார கல் சிறந்த மருந்தாகிறது..கெட்ட கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதற்கும் உதவுகிறது. இந்த படிகார பொடியை, ஷாம்பு அல்லது சீயக்காயுடன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகுகள், அரிப்புகள் நீங்கும். தூங்கும் முன் கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலும், கெட்ட கனவுகள் வராது
மருத்துவ குணம் வாய்ந்த இந்த படிகாரங்கள் ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளவை. இந்த கல்லில் எதிர்மறையான சக்திகள் அதிகமாக உள்ளன.. திருஷ்டி எடுக்கக்கூடிய சக்தி படிகார கற்களுக்கு அதிகம் உண்டு.. எனவேதான், எலுமிச்சை, மிளகாயுடன் பரிகாரத்தையும் சேர்த்து திருஷ்டி நீக்குவதற்காக பயன்படுத்துவார்கள். புதிய வாகனம் வாங்கினாலும், இந்த படிகார கலவையைதான் மாட்டி விடுவார்கள்.
வாஸ்து தொந்தரவு: வீடு, அலுவலகங்களில் வாஸ்து தொந்தரவு இருந்தாலும், இந்த பரிகாரம்தான், அங்கு கட்டி வைக்கப்படுகிறது. பயன்படுத்தலாம்.. ஆனால், இப்படி திருஷ்டிக்காக வைக்கப்படும் படிகாரங்கள், சில நாளில் நிறம் மாறிவிடும்போது, புதிய படிகாரம் மாற்றி வைக்க வேண்டும்.
கடன் பிரச்சனை இருந்தாலோ அல்லது நிதி நிலைமை குலைந்தாலோ, இவைகளை சரிசெய்ய படிகாரத்தில் பரிகாரம் செய்யலாம்.. ஒரு வெள்ளை பேப்பரில் , உங்கள் கடன் தொகை மற்றும் கோரிக்கையை எழுதி, அந்த பேப்பருக்கு நடுவே ஒரு பச்சைக்கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து மடித்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் துணி: இந்த பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி பூஜையறையில் வைத்து, குலதெய்வத்தை வேண்டி கொள்ள வேண்டும். இதற்கு பிறகு நிதிநிலைமையை சரிசெய்யும் வேலையை நீங்கள் ஆரம்பித்தால் 48 நாட்களுக்குள் அனைத்தும் சீராகும்.
அதேபோல, திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டிய மற்றொரு பரிகாரமும் உண்டு. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில், படிகார கற்களை, சிறு துண்டு துண்டாக உடைத்து போட வேண்டும். படிகார கல் உருகிவிடாமல், அது சூடாக துவங்கியதுமே வலது கையால் எடுத்து, வீட்டில் கிழக்கு திசையில் நின்று கொண்டு, உங்களது வேண்டுதலை மனதில் சொல்ல வேண்டும்.
உச்சிவெயில்: பிறகு கையில் வைத்துள்ள படிகார கல்லை 7 முறை, உங்கள் தலையை வலது புறமாக சுற்ற வேண்டும். இறுதியில், ஒரு பேப்பரில் இதை வைத்து சுருட்டி, சாக்கடை அல்லது குப்பை கூளங்களில் வீசிவிடலாம். உச்சிவெயில் 12 மணி தவிர்த்து, இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்து வரும்போது, உங்கள் விருப்பம், கோரிக்கை நிறைவேறுமாம்.












Click it and Unblock the Notifications