சனிக்கிழமையின் ஸ்பெஷாலிட்டீஸ்.. தாலி சரடு மாத்தணுமா? சனிக்கிழமைகளில் இதெல்லாம் செய்யாதீங்க: ஆன்மீகம்
சென்னை: சனிக்கிழமைகள் என்றாலே முக்கியத்துவம் நிறைந்த நாட்களாகும்.. சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சில வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
ஒவ்வொரு கிழமைகளிலும், ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.. அதேபோல, சில பொருட்களை, குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கினாலும் துரதிருஷ்டம் சேர்ந்துவிடும். அந்தவகையில், சனிக்கிழமையில் வாங்க கூடாத பொருட்களை என்னென்னவென்று பார்ப்போம்.

சனிக்கிழமைகள்: இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள் என்பதால், சனிக்கிழமைகளில், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது.... இரும்பு மட்டுமல்லாமல், கூர்மையான பொருட்கள், ஆயுதங்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது.. ஆனால், கோயில்களுக்கு இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கி தரலாம்..
சமையலுக்கு தேவைப்படும் மாவு, உப்பு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.. அதேபோல, வீட்டிலிருந்தும் பிறருக்கு உப்பு வாங்கவோ, காரம் கொடுக்கவோ கூடாது.. இது மேலும் கடனை அதிகரித்துவிடும்.
புத்தாடைகள்: தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாமே தவிர, சனிக்கிழமைகளில் எண்ணெய்யும் வாங்க கூடாது.. புதிய ஆடைகளை வாங்கவும் கூடாது, அணியவும் கூடாது. சனிக்கிழமைகளில் தங்க நகை வாங்கலாம், அணிந்தும் கொள்ளலாம்.. வெள்ளிக்கிழமைகள், உகாதி பண்டிகை, அட்சய திருதி, நவராத்திரி பண்டிகை காலங்களிலும் நல்ல நேரம் பார்த்து தங்கம் வாங்கலாம். அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது.
அதேபோல, தாலி கயிறு மங்களகரமான நாளில் மட்டுமே மாற்ற வேண்டும்.. ஆனால் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் தாலி கயிறு மாற்றக்கூடாது..
அவமதிப்பு: எப்போதுமே, சனிக்கிழமையன்று சுத்தமான காலணி அல்லது செருப்புகளை தானம் செய்யலாம்.. இதனால், சனி தோஷங்கள் நீங்கும்.. ஆனால் காலணிகள், செருப்புகளை பரிசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.. எந்த உயிரினங்களுக்கு தீங்கு இழைக்காமல், சனிக்கிழமைகளில் ஆதரவற்றவர்கள், ஏழைகள் அல்லது முதியவர்கள் யாரையும் தவறுதலாக அவமதிக்காமல் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதேபோல, சனிக்கிழமைகளில் அசைவ உணவை உண்பது மிகவும் அமங்கலமாக கருதப்படுகிறது. இந்த நாளில், சனி பகவான் அசைவ உணவை சாப்பிடுபவர்கள் அல்லது சமைப்பவர்களை தண்டிப்பாராம்.. அதேபோல, சனிக்கிழமைகளில் மது அருந்தக் கூடாது... சனிக்கிழமை அன்று முடி, தாடி அல்லது நகங்களை வெட்ட கூடாது. இதுவும், எதிர்மறையான தாக்கத்தை வாழ்க்கையில் ஏற்படுத்து விடும்.. சனி தோஷமும் இந்த செயல்களால் ஏற்படுவதால், இவைகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications