வெள்ளெருக்கு திரி.. விளக்கேற்ற பெஸ்ட் திரிகள்.. வாவ் வாழைத்தண்டு திரி.. தீபம் ஏற்றுவதால் செம பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் விளக்கேற்றும்போது, மகாலட்சுமி வாசம் செய்வாள்.. இதனால், வீட்டில் நல்ல அதிர்ஷ்டம், செல்வம், சாந்தி கிடைக்கும். காலை, மாலை இரு வேளைகளிலும் விளக்கேற்ற வேண்டும் என்பார்கள்.. அந்தவகையில், விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. அந்தவகையில் திரிகளின் வகைகள்? என்னென்ன திரிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன? என்பதை பார்ப்போம்.

எப்போதுமே 2 திரிகளை சேர்த்து வைத்து, ஒன்றாக முறுக்கி தீபம் ஏற்ற வேண்டும்.. இந்த தீபம் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி இருக்க வேண்டும்... எக்காரணம் கொண்டும், தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Spirituality Vellerukku thiri Vilakku thiri

திரிகளில் பலவகைகள் உள்ளன.. உதாரணமாக, பஞ்சு திரியினால் விளக்கு ஏற்றலாம்.. சுத்தமான இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் மங்கலம் நிலைத்து நிற்கும்.. தெய்வ குற்றம், பித்ரு சாபத்திலிருந்து விடுபட, இந்த பஞ்சு திரி தீபம் உதவுகிறது.

வெள்ளை நூல் திரிகள் தரும் நன்மை

வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து, அதற்கு பிறகு திரியாக்கி விளக்கேற்ற வேண்டும். இந்த வெள்ளை நூல் திரியில் தீபம் ஏற்றினால், குடும்பம் செழிக்கும், படிப்பு, வேலைகளில் வெற்றி பெற வேண்டுமானால் வெள்ளை திரி விளக்கேற்றலாம். சந்திரனுக்கு உகந்த வெள்ளை திரி விளக்கை திங்கட்கிழமைகளில் ஏற்றலாம்.

தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், இதனை வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது சிறப்பை தரும்.. இந்த திரியில் தீபம் ஏற்றும்போது, பூர்வ ஜென்ம பாவமும், தெய்வக்குற்றமும், செய்வினை கோளாறுகளும் நீங்கும். இதனால், குலதெய்வ அருள் கிடைப்பதுடன், மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

வெள்ளை எருக்கு - சிவப்பு திரி

வெள்ளை எருக்கன் திரியை தீபம் ஏற்ற பயன்படுத்துவதால், விநாயகப் பெருமானின் அருள் கிடைக்கும்.. வீட்டில் நிதிநிலைமை சீராகும்.. தீய சக்திகளும், நச்சுக்கிருமிகளும் வீட்டுக்குள் நுழையாது..

சிவப்பு திரியில் விளக்கேற்றினால், நீண்ட நாட்களாக தடைபட்டு வரும் திருமணம், சுபகாரியம் நடக்கும்.. புத்திர பாக்கியமும் கிட்டும். தம்பதிக்குள் இணக்கமான சூழல் ஏற்படும்.. நீண்ட காலமாக நோயில் அவதிப்படுபவர்கள், சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றுவதால், நோயின் வீர்யம் குறைவதுடன், மெல்ல மெல்ல நோயிலிருந்து விடுபடலாம். செவ்வாய்கிழமைகளில் சிவப்பு திரியைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மஞ்சள் திரி - வாழைத்தண்டு திரி

மஞ்சள் திரியில் விளக்கை ஏற்றுவதாக இருந்தால், வெள்ளிக்கிழமையன்று அம்பிகை படத்திற்கு ஏற்றி வைக்கலாம். அதேபோல, குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால், வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற திரி போட்டு விளக்கு ஏற்றலாம். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் தழைக்கும்.. புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் விளக்கேற்றினால், முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் குலதெய்வ சாபங்கள் நீங்கும், பித்ரு சாபம் நீங்கும், குழந்தை வரம் கிட்டும்.

ராகு கேது வண்ண திரிகள்

கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்கள், இந்த பச்சை நிற திரியில் விளக்கேற்றலாம்.. பச்சை திரி குபேரனுக்கு உரியதாகும். செல்வம் பெருகுவதுடன், சமூக அந்தஸ்தும் கூடும். அதுமட்டுமல்ல, புதனுக்கு உரிய நிறம் பச்சை என்பதால் புதன்கிழமை பச்சை திரி கொண்டு விளக்கு ஏற்றுவது நன்மைகளை தரும்.

அதேபோல, சனி பகவானுக்கு உகந்த நிறம் கருப்பு என்பதால் சனிக்கிழமைகளில் கருப்பு திரி போட்டு விளக்கு ஏற்றலாம்... அதாவது, ராகு பகவானுக்கு நீல திரியும், கேது பகவானுக்கு பல வண்ணம் கொண்ட திரியும் போட்டும் விளக்கேற்றலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+