அதிர்ஷ்டம் இதுவல்லவோ.. அந்த பறவை உங்கள் தோளை தட்டுகிறதா? காகம் தலையில் அமர்வது நல்லதா? ஓஹோ
சென்னை: பறவைகள் மனிதர்கள் தோள் மீது அமர்ந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? காகம் தலையில் தட்டினால் என்ன பலன் தெரியுமா? இதுகுறித்தெல்லாம் வேத சாஸ்திரத்தில் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
வீட்டிற்குள் ஒரு சில பறவைகள் வருவது அபசகுணம் என்பார்கள்.. குறிப்பாக வவ்வால்கள் வீட்டிற்குள் நுழைவது ஆபத்தானமாக பார்க்கப்படுகிறது.. வீட்டின் நல்வாழ்வு பாதிப்பதுடன், நிதிநிலைமையும் மோசமாகிவிடுமாம். கழுகுகள் வீடுகளில் நுழைந்தாலும், அசுபமாக கருதப்படுகிறது.

ஆனால், வேற சில பறவைகள் வீட்டிற்குள் வருவது, குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் என்பார்கள்.. குடும்ப உறுப்பினர்களுக்கு சில நல்ல குறிகளை உணர்த்திவிட்டு போய்விடுமாம். அந்தவகையில், தெய்வங்களின் வாகனங்களாக கருதப்படும், காகம், புறாக்கள், ஆந்தைகள், கழுகுகள், மயில், போன்ற பறவைகள் வீட்டிற்குள் வருவது நல்லது.
சுபகாரியங்கள்: அதேபோல, வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் நுழைந்து, தெய்வமாக இருந்து உங்களை ஆபத்திலிருந்து காப்பார்களாம். வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால், திருமண தடைகள் விலகி, சுப காரியங்கள் சீக்கிரத்தில் நடைபெறும்.. மழைக்காலங்களில் வரும் தட்டாம்பூச்சிகள் வீட்டிற்குள் வந்தாலும் நன்மைதானாம்.
அதேசமயம், இந்த பறவைகள் மனிதர்கள் மீது அமர்ந்தால், இதற்கும் பலன்களை சொல்லி வைத்துள்ளார்கள் முன்னோர்கள்.. அந்தவகையில், ஒரு பறவை தானாக வந்து தோளில் அமர்ந்தால், குடும்பத்தில் வருமானம் அதிகரிக்குமாம்.. சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையும், மகிழ்ச்சி செய்திகளையும் கேட்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. குருவி தலையில் தட்டினால் அதுவும் அதிர்ஷ்டமாம்.
கெட்ட சகுனம்: வெள்ளை பறவை வீட்டின் மீது பறந்தால் அது மிகவும் நல்லது என்கிறார்கள்.. அதுவே, கருப்பு நிற பறவை வீட்டின் மீது பறந்தால் அது கெட்ட சகுனத்தை உணர்த்தக்கூடியது. அதிலும், திருமண மண்டபத்தில் காகம் வந்து நீண்ட நேரம் அமர்ந்தால், தம்பதியர் விரைவில் பிரிந்து விடுவார்களாம். சில நேரங்களில் இப்படி காகம் கரைவது மரணத்தையும் குறிக்கிறதாம்.
ஆனால், காகம் தலையில் தண்டினால் அது நம்முடைய முன்னோர்களுக்கு ஏதோ ஒன்றை செய்யாமல் விட்டிருக்கிறோம். அது காகத்தின் மூலம் நம்மிடம் வந்து அவர்கள் சொல்வதாக அர்த்தமாம்.
எள்ளு விளக்கு: இப்படி நடந்தால், உடனடியாக வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி, குல தெய்வத்தை வணங்க வேண்டுமாம்.. சனீஸ்வர பகவானுக்கு எள்ளு விளக்கு ஏற்றி, காகத்திற்கும் தினமும் உணவு வைத்து வரவேண்டும்.. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முழு படையல் போட்டு வழிபட வேண்டும். எனவே, காகம் தலையில் தட்டினால் நாம் செய்யும் காரியங்களில் மட்டுமே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications