Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிலை வெற்றி.. வெற்றிலையை இந்த திசையில்தான் வைக்கணும்.. பூஜையில் வைத்த வெற்றிலையை என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலைகளை பூஜைகளில் ஏன் வைத்து வழிபடுகிறோம் தெரியுமா? பூஜை முடிந்ததுமே அந்த வெற்றிலையை என்ன செய்யலாம் தெரியுமா?
பல சுப காரியங்களுக்கும், குறிப்பாக வீட்டு விசேஷங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சியில் தாம்பூல தட்டில் வெற்றிலைகளை வைப்பது தமிழர்களின் மரபாகும்.. உணவு உண்டதுமே வெற்றிலையுடன் பாக்கு-சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதும் வழக்கமாக இருந்துவருகிறது.

Spirituality Betel Leaves Betel Leaf Vastu Tips

வெற்றிலை: வெற்றிலையை சாப்பிடுவது, செரிமானத்தை ஏற்படுத்தி பசியை உண்டாக்கும், ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், வாத நோய், வறட்டு இருமல், நுரையீரல், செரிமான கோளாறு, ஒற்றை தலைவலி, பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரக்க, என சர்வ ரோகங்களை போக்க பெரிதும் உதவுகிறது வெற்றிலை.

பல் வலி, ஈறுகளில் வீக்கம் நீக்க, வெற்றிலையை மென்று வந்தாலே போதும். வயிற்று வலி, வயிற்று மந்தம், உப்பசம், முதல் தேள் கடி விஷத்தை முறிப்பது வரை வெற்றிலையின் பங்கு அபாரம்.

வெற்றிலை காம்பு: அதேசமயம், ஆன்மீகத்தில் வெற்றிலையின் பங்கு தவிர்க்க முடியாதது.. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம்.. இந்த 3 தேவிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள்... இவர்களின் அனைத்து ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, வெற்றிலையை பூஜைகளில் வைத்து வழிபடப்படுகிறது.

அந்தவகையில், வெற்றிலை மங்களம் மற்றும் செழுமையின் சின்னமாக கருதப்படுகிறது வெற்றிலையில் உள்ள உள்ளார்ந்த பண்புகள் நேர்மறை ஆற்றலையும், தெய்வீக ஆசீர்வாதங்களையும் வழிபடுபவர்களுக்கு ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

சுபகாரியம்: அதனால்தான், எந்த ஒரு நல்ல காரியத்தை துவக்கும்போதும், அதற்கான தொகையை தரும்போதும், பணத்துடன் வெற்றிலையையும் சேர்த்து வைத்தே கொடுப்பார்கள். திருமண நிச்சயத்தையும், வெற்றிலை பாக்கை வைத்துதான் உறுதி செய்து கொள்வார்கள். உறவுகள் மேன்மேலும் தொடர வேண்டும் என்பதற்காகவே, விருந்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் வெற்றிலை பாக்கு தந்து வழியனுப்பி வைக்கிறார்கள்.

பூஜைகளும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள் சுபமாக நடக்க, வெற்றிலை பாக்கு தவறாமல் படைக்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலைகளை பூஜைகளில் எப்படி பயன்படுத்த வேண்டும், வெற்றிலையை உபயோகிக்கும் முறைகள் குறித்து முன்னோர்கள் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

காம்பு பகுதி: அந்தவகையில் எப்போதுமே, கழுவிய பிறகு வெற்றிலைகளை பூஜைக்கு வைக்க வேண்டும்... வெற்றிலையின் நுனிப்பாகம் சாமிக்கு இடதுபுறம் வருமாறு வைக்க வேண்டும்... அதாவது, வெற்றிலையின் காம்பு பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். வெற்றிலை கடவுளை பார்த்தவாறு வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பகுதியை நோக்கி இருக்கக்கூடாது.

பூஜையில் 4 வெற்றிலையையும் 2 பாக்கினையும் வைப்பது நல்லது. அல்லது 2 வெற்றிலையையும் வைக்கலாம். இதுவே துக்க காரியத்திற்கு, 1 வெற்றிலை 1 பாக்கு மட்டும் வைக்க வேண்டும். அதேபோல, பூஜையில் வெற்றிலையை மட்டும் தனியாக வைக்க கூடாது,.. எப்போதுமே வெற்றிலையுடன் வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கல் கண்டு, இப்படி ஏதாவது ஒன்றை கட்டாயமாக வைத்துதான் பூஜிக்க வேண்டும்.

வாடக்கூடாது: வெற்றிலையை எப்போதுமே வாடவிடக்கூடாது.. பூஜை முடிந்த வெற்றிலையை வாடவிடாமல், வெற்றிலை போடும் நபர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். அப்படியே கொடுத்தாலும், தனி வெற்றிலையாக தரக்கூடாது.

வெற்றிலையை பிறருக்கு தரும்போது, பாக்கு, மஞ்சள், பூ இப்படி ஏதாவது ஒரு பொருளை வெற்றிலையுடன் சேர்த்தே தர வேண்டும்.. தனியாக வெற்றிலையை தந்தால், செல்வம், உறவு அறுந்துவிடும் என்பார்கள். அதுபோல, வெற்றிலையை எப்போதுமே வலதுகையால்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் வெற்றிலை கொடியையும் தனியாக வளர்க்காமல், வேறு ஏதாவது ஒரு கொடியுடன் சேர்த்துதான் வளர்ப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+