Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க கருடன் மீது வலம் வரும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்..துன்பங்கள் நீக்கும் ரங்கநாதர் கோவில் ரேவதி தேர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை தேரோட்டத்தை கண்டால் துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் பக்தர்கள் திரண்டு வந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

தேராட்டம் என்பது ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையை குறிப்பதாலும் தேர் மெதுவாக செல்லும் தன்மை கொண்டதாலும் சனைஸ்வர பகவானும் காரகனாகின்றனர் ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இவர்களுக்கு நிலையான வாழ்வு இருக்காது. வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள்.

Srirangam Renganathar temple Chithirai Virupan Tirunaal Revathi Ther festival on 19th April

தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் நாளை நடைபெறும் தேரோட்டம் கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் இன்பமும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விருப்பன் திருநாள் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வந்தார். விழாவின் 4ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

நாளை சனிக்கிழமை காலை சேஷ வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 16ஆம்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17ஆம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18ஆம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. 20ஆம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

Srirangam Renganathar temple Chithirai Virupan Tirunaal Revathi Ther festival on 19th April

தேரோட்டத்தை காணும் போது நம்முடைய துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார். மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இவர்களுக்கு நிலையான வாழ்வு இருக்காது. வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள்.தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+