Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி.. நானும் கும்ப ராசிதான்.. சனி ஆசி எல்லோருக்கும் கிடைக்கும் - தமிழிசை செளந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

திருநள்ளாறு: சனி பகவானின் ஆசி எல்லோருக்கும் கிடைக்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்துள்ள நிலையில் எல்லா ராசியும் நல்ல ராசிதான் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனி பகவான் நேற்று மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சனீஸ்வர பகவானுக்கு திருநள்ளாற்றில் சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tamilisai Soundararajan Offer Prayers at Thirunallar Sri Saneeswarar Bagavan Temple

சனி பகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் சனி பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். சனி பெயர்ச்சி நிகழ்ந்த போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திருநள்ளாறு கோவிலுக்கு நேற்று வருகை புரிந்தார். அவரை சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை செளந்தரராஜன்.

தருமபுரம் ஆதினத்துடன் சென்று திருநள்ளாறு சனி பகவானை வழிபட்ட பின்னர் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்கால், திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீசனிஸ்வர பகவான் திருக்கோயிலில் தரிசனம் செய்தேன். மக்கள் அனைவரும் ஆரோக்கிய நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பிரமாதம்.. பிரமாதம்.. சாமி கூட சேர்ந்து சனி பகவானை தரிசனத்தை பெரிய பாக்கியமாக நான் நினைக்கிறேன். எல்லோரும் நல்லா இருக்கணும்னு தான் சாமி கும்பிட்டேன். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பெயரில் அரச்சனை செய்தோம் என்றார்.

நாட்டு மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவங்க நல்லா இருக்கணும்னு சாமி கும்பிட்டேன் என்று தெரிவித்தார். மகர ராசியில் இருந்து சனி பகவான் கும்ப ராசிக்கு மாறி இருக்காரு. நானும் கும்ப ராசி தான். எனக்கு நன்றாக இருக்கிறது. எனக்கு எல்லா ராசியும் நல்ல ராசி தான் என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

சனி பெயர்ச்சி நாளில் திருநள்ளாறு கோவிலுக்கு வந்தவர்களுக்கு மட்டுமல்லாது எங்கிருந்தாலும் சனி பகவானின் ஆசி கிடைக்கும் என்று தெரிவித்தார். சனி பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் அச்சத்துடனேயே இருக்கிறார்கள். கும்ப ராசியில் சனிபகவான் குடிபெயர்வதால் அந்த ராசிக்காரர்கள் ஜென்ம சனி என்று ஆடிதான் போயிருக்கிறார்கள். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், என்னோட ராசியும் கும்ப ராசி தான் என்று கூறியதோடு எல்லா ராசியும் நல்ல ராசிதான் என்று தெரிவித்துள்ளார்.

திருநள்ளாறு தரிசனம் முடிந்த பிறகு சிதம்பரம் சென்ற தமிழிசை சௌந்தரராஜன், நடராஜர் திருக்கோவில், தில்லை காளியம்மனை தரிசனம் செய்துள்ளார். இதனையும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழிசை சவுந்தராஜன். சிதம்பரம் அருள்மிகு தில்லை ஸ்ரீநடராஜர் திருக்கோயில் தில்லை ஶ்ரீகாளியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்தேன். மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய இறைவனை பிரார்த்தித்தேன் என்று பதிவிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

சிதம்பரம் அருள்மிகு தில்லை ஸ்ரீநடராஜர் திருக்கோயில் & தில்லை ஶ்ரீகாளியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்தேன். மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய இறைவனை பிரார்த்தித்தேன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+