திதியும், படையலும்.. அமாவாசையில் வாசலில் காகம் வடிவில் முன்னோர்கள்! காகத்திற்கு உணவு வைத்தால் ஆசிகள்
சென்னை: மற்ற ஜீவராசிகள் இருக்கும்போது, காகத்திற்கு அமாவாசை தினத்தில் உணவளிப்பது ஏன்? தெரியுமா? அப்படி காகங்களுக்கு உணவு படைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? காகங்களுக்கு எப்படி உணவு வைக்க வேண்டும்? சுருக்கமாக பார்க்கலாம்.
சனிபகவானுக்கு வாகனமாக கருதப்படுவது காகம். இறந்து போன ஆத்மாக்கள், காகத்தின் ரூபத்தில் நம்முடைய வீடு தேடி வருவதாக நம்பிக்கை உள்ளது.. எனவேதான், அமாவாசை தினங்களில் காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது.

தை அமாவாசை: புரட்டாசி, தை, ஆடி அமாவாசை என இந்த 3 அமாவாசை நாட்களிலும் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, திதியை தந்துவிடவேண்டும் என்பார்கள்.. சில சமயம், நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடாமல் போய்விடுவது, பலருக்கும் குழப்பத்தையும், சங்கடத்தையும், ஏற்படுத்திவிடும்.. அப்படி நீங்கள் வைக்கும் உணவை காகம் எடுக்காமல் போனால், உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.. எனவேதான், முன்னோர்களுக்கு தவறாமல் திதி கொடுத்து வரவேண்டும் என்கிறார்கள்.
இன்றைய தினம் தை அமாவாசை ஆகும்.. எனவே, முன்னோர்களுக்கு திதி தந்துவிட்டு, காகங்களுக்கு உணவு வைக்க வேண்டும். உணவு வகைகளை தனித்தனியாக வைக்காமல், ஒரே இலையில், பாயாசம், வடை, அப்பளம் உட்பட அனைத்து உணவுகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து காகங்களுக்கு வைக்க வேண்டும். காகங்களுக்கு இவைகளை வைத்தாலும், அணில், குருவி போன்ற மற்ற உயிரினங்களும் இந்த உணவை சாப்பிட செய்கின்றன.
முன்னோர்கள்: நாம் படைக்கும் இந்த உணவை முன்னோர்களின் வடிவில் காகங்கள் தான் உண்ணும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. எனவே, முன்னோர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து விரதம் இருந்து படையல் வைப்பதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகும்.. முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்குமாம்... அத்துடன், செய்வினை கோளாறுகள் நம்மை அண்டாது.. தீராத கடன் தொல்லைகள், குடும்ப பிரச்சினைகள்தீரும். குழந்தைபாக்கியம், கல்யாண யோகம் கிட்டும்.
அப்படி காகங்களுக்கு நாம் உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைகிறாராம்.. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் சொல்லப்படுகிறது. எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவருமே ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.
விரதம்: எனவே, தை அமாவாசை தினத்தில், காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பிறகே, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
அமாவாசை என்றில்லாமல் தினமும் காகங்களுக்கு சாதம் வைக்க வேண்டுமாம். எப்போதுமே காகங்களுக்கு சாதம் வைக்கும்போது, ஒருசில தவறுகளை நாம் மறந்தும் செய்யக்கூடாது என்கிறார்கள்..
தவறுகள்: குறிப்பாக, அசைவ உணவுகளை காகத்திற்கு வைக்கக் கூடாது. தம்பதிகள் ஒன்றாக இருந்துவிட்டு, தீட்டுடன் இருக்கும்போது காகத்திற்கு சாதம் வைக்க கூடாது. அதேபோல, மீதமான உணவுகளை அல்லது எச்சில் சாப்பாட்டை காகத்துக்கு வைக்கக்கூடாது.. இதனால் தோஷம் உண்டாகுமாம். குளிக்காமலம் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்கவே கூடாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications