தைப்பூசம் நாளில் வரும் குரு புஷ்ய யோகம்... குபேரனை வழிபட்டால் கோடீஸ்வரன் ஆகும் யோகம் தேடி வரும்
சென்னை: தைப்பூசம் திருநாள் கொண்டாடப்பட உள்ள ஜனவரி 25ஆம் தேதி வியாழக்கிழமையன்று மிகவும் அரிதான குரு புஷ்ய யோகம் கூடி வருகிறது. இந்த நாளில் குரு பகவானை வணங்கினால் குபேரனாகும் யோகம் தேடி வரப்போகிறது. செல்வ வளம் நிறைந்த இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.
குபேர பூஜை: இந்த நாளில் குபேர பூஜை செய்து வழிபட்டால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நாளை மறுநாள் ஜனவரி 25ஆம் தேதியன்று வியாழக்கிழமை பூசம் நட்சத்திரமும் கூடிய குரு புஷ்ய யோகம் கூடி வந்துள்ளது. அதை விட சிறப்பு பவுர்ணமி யோகமும் தேடி வந்துள்ளது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நட்சத்திரம் பூசம்.

குபோர பூஜை: இந்த நாளில் குபேர பூஜை செய்து வழிபட்டால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நாளை மறுநாள் ஜனவரி 25ஆம் தேதியன்று வியாழக்கிழமை பூசம் நட்சத்திரமும் கூடிய குரு புஷ்ய யோகம் கூடி வந்துள்ளது. அதை விட சிறப்பு பவுர்ணமி யோகமும் தேடி வந்துள்ளது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நட்சத்திரம் பூசம்.
மகாலட்சுமியின் ஆசீர்வாதம்: பூசம் நட்சத்திரம் மற்றும் வியாழக்கிழமை இணைந்து வரக்கூடிய நாள் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்கிறது. இந்த தினத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய நாள் மிகச் சிறந்த நாள். குரு பூசம் யோகா தினம் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளாகும்.
செல்வத்திற்கு அதிபதி: லட்சுமி குபேர பூஜை செய்யவும் இந்த நாள் ஏற்ற நாள். செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர்.குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தனர். குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் ஸ்வர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். குபேரனுக்கு ராவணன்,கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர்.
நவநிதிகள் பெற்ற குபேரன்: பத்மம்,மஹாபத்மம்,மகரம்,கச்சபம்,குமுதம்,நந்தம்,சங்கம்,நீலம்,பத்மினி ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பதும நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் என்று நம்பப்படுகிறது.
இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி,பதும லட்சுமி என்று அழைக்கின்றார்கள். இவர்கள் இருவரும் குபேரனின் மனைவிமார்கள் என்றும், இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
குபேர மந்திரம்: குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர சம்பத்து வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும். நாளை மறுநாள் வியாழக்கிழமை 25ஆம் தேதியன்று குரு புஷ்ய யோகம் இணைந்த நல்ல நாளில், குபேர மந்திரமான "ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம் ஸ்ரீம் கும் குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!" என்று சொல்லி வணங்கலாம்.
செல்வம் பெருகும்: சனியின் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கும் பூச நட்சத்திரம் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அமையும் போது, மங்களகரமாகிறது. இந்த நாளில் புனித செயல்கள் செய்யலாம் தங்க, வைர நகைகள் வாங்கவும், புதிய மனை, வீடு வாங்க ஏற்ற நாள். நிலம், சொத்து, வெள்ளி, மின்னணு பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்க இந்த நாள் சிறந்த நாளாகும்.
தேடி வரும் கோடீஸ்வர யோகம்: பொதுவாகவே வியாழக்கிழமை குரு பகவானின் ஆசி நிறைந்த நாள். வியாழக்கிழமை தினத்தன்று குபேரனை வழிபட்டால் அதிகமாக செல்வம் சேரும். பூசம் நட்சத்திரமும் இணைந்த அற்புதமான நாளாக உள்ளதால் மகாலட்சுமி பூஜை செய்யவும் குபேர பூஜை செய்யவும் எற்ற நாள். வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார். மறக்காமல் குபேர பூஜை செய்யுங்கள். கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்.












Click it and Unblock the Notifications