திருமலை திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! வெங்கடாஜலபதியை எந்த இடையூறும் இல்லாமல் தரிசிக்கலாமே!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி பக்தர்கள் இனி எந்த கவலையும் இல்லாமல் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதிக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை, விடுமுறை, பிரம்மோற்சவ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது.

spirtuality thirupathi darshan

திருமலைக்கு பக்தர்கள் சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், ரூ 300 சிறப்பு கட்டண தரிசனம் போன்றவைகளின் மூலம் வருகை தருகிறார்கள். இவர்களில் தேவைப்படுவோர் தங்குமிடங்களை புக் செய்து கொள்கிறார்கள்.

இல்லாதவர்கள் கோயிலிலேயே ஆங்காங்கே தங்கிவிடுகிறார்கள். இந்த நிலையில் ரூ 300 கட்டண தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் பல்வேறு சேவைகளிலும் இடைத்தரகர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கையை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அதாவது திருப்பதி திருமலையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆதார், ஜியோ, டிசிஎஸ் மற்றும் தேவஸ்தானத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகுதான் ஆதார் கட்டாயம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பக்தர்கள் அதிக விலை கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட் வாங்குவதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய சம்பவம்: ஒரு முறை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பக்தர் ஏ.சீனிவாஸ் என்பவர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடிவு செய்தார். இதற்காக சீனிவாஸ், திருப்பதியைச் சேர்ந்த ரகுசாய்தேஜா என்பவரை நண்பர் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன் தனக்கு 4 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வேண்டும், என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரகுசாய்தேஜா, "நான் திருமலையில் உள்ள லட்டு கவுன்ட்டரில் வேலை செய்து வருகிறேன். உங்களுக்கு தேவையான வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ரகுசாய் தேஜா கூறியபடியே கடந்த மே 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் 'போன் பே' மூலம் சீனிவாஸ் 4 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுக்கு மொத்தம் ரூ.17 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் ரகுசாய்தேஜா பழைய வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை சேகரித்து அதில் உள்ள பெயர்கள், தேதி போன்ற விவரங்களை மாற்றி, போலியாக வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை உருவாக்கி இருக்கிறார். பின்னர் போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பக்தர் சீனிவாசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுடன் நேற்று முன்தினம் காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகத்துக்கு சீனிவாஸ் உள்ளிட்ட 4 பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள்.

அந்தத் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவை, போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் என்பது உறுதியானது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இது போல் நிறைய முறைகேடுகள் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+