மதுரை குலுங்க கோவிந்தா! சரண கோஷங்களுடன் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்திய அழகர் கோவில் ஆடித் தேர்!
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோவில் எனப்படும் அழகர் கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா சரண கோஷங்களுடன் வடம்பிடித்து இழுக்க 60 அடி உயர ஆடித் தேரில் அசைந்தாடியபடியே அருள் பாலித்தார் கள்ளழகர் பெருமாள். ஆடித் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கள்ளழகர்.
’தூங்கா நகரமான’ மதுரை திருவிழாக்களின் நகரம்தான். சித்திரை மாதம் நடைபெறுகிற திருவிழாக்களுக்கு இணையானது ஆடி மாதம் அழகர் கோவில் திருத்தேரோட்ட நிகழ்வு. அழகர் கோவில் ஆடித் திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வுதான் கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டம். கடந்த 13-ந் தேதி அழகர் கோவில் ஆடித் திருவிழா நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்களில் எப்போதும் அறியப்படாத மரபுகள் காலந்தோறும் பின்பற்றப்படுகிற நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தைப் பொறுத்தவரையில் வெள்ளையங்குன்றம் ஜமீன்தான் அழகரை தேரில் அழைத்துச் செல்லக் கூடிய முதல் நபர். அழகர் கோவில் கணக்கு பிள்ளையாக இருந்தவர்கள் வெள்ளையங்குன்றம் ஜமீன். ஒவ்வொரு ஆடித் தேரோட்டத்தின் போது வெள்ளையங்குன்றம் ஜமீன்தான் தேங்காய் உடைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார்.
அதேபோல ஆடித் தேரோட்டத்தின் போது அழகர் கோவிலைச் சுற்றிய 18 கிராமங்களைச் (பட்டிகள்) சேர்ந்த கள்ளர் ஜாதியினருக்கு அழகர் கோவில் நிர்வாகம் பரிவட்டம் கட்டுகிற நடைமுறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. இந்த 18 கிராமங்களில் 4 கிராம மக்கள்தான் முதலில் வடம்பிடித்து தேர் இழுக்க பின்னர்தான் பக்தர்கள் இணைந்து கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமத்துக்கு வாய்ப்பு தரப்பட்டு 'வல்லம்’ என்பது வீசப்பட்ட பின் தேரோட்டம் தொடங்கும். இந்த ஆண்டு வல்லாளப்பட்டிக்கு வல்லம் வீசும் வாய்ப்பு தரப்பட்டது.
இதையடுத்து அழகர் கோவிலைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! சரண கோஷங்களுடன் திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியர் சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி வலம் வந்தார் கள்ளழகர் பெருமாள். அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அதேநேரத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தில் அழகர் பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று மாலை அழகர் கோவிலில் 18-ம் படி கருப்பண்ணசாமி கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications