திருச்சானூர் பத்மாவதி தாயார் தெப்ப உற்சவம்..ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவ விழா இன்று தொடங்கி ஜூன் 04 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வருடாந்திர தெப்போற்சவம் நடக்கும் இந்த ஐந்து நாட்களும் திருச்சானூரில் வழக்கமாக நடக்கும் ஆர்ஜித கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் இன்று மே 31ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 4ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது.
இதே போல திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வாகிக்கப்பட்டு வரும் கோவில்களில் நாராயண வனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த தலத்தில் தான் ஸ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து திருமலைக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நாராயணவனமே ஆகாச ராஜனின் தலைநகராக இருந்ததாகவும், இங்கேயே தனது மகள் பத்மாவதியின் திருமண ஏற்பாடுகளை அவர் செய்தாகவும் சொல்லப்படுகிறது. அவர் பத்மாவதிக்காக சீதனமாக கொடுத்த திருச்சானூர் அவருக்குரிய கோவிலாகவும், திருப்பதி ஏழுமலையான் திருமலையிலும் கோவில் கொண்டதாக சொல்லப்படுகிறது.
கி.பி1541 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில் பல முறை விரிவாக்கம் செய்து கட்டப்பட்டுள்ளது. நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ பெருமாள் கோவில், கல்யாண வரமருளும் கோவிலாகவும், புதிதாக கல்யாணம் ஆனவர்களின் வாழ்வில் ஒற்றுமையை தரக் கோவிலாக விளங்குகிறது.
திருப்பதியில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் ஜூன் 08ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்ரீ கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி ஆலயத்தில் பிரம்மோற்சவம் துவங்குவதற்கு முன்தைய நிகழ்வான கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மே 24 ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்க உள்ளது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 01 - சின்ன சேஷ வாகனம்
ஜூன் 02 - சிம்ம வாகனம்
ஜூன் 03 - கற்பவிருட்ச வாகனம்
ஜூன் 04 - மோகினி அவதாரம்
ஜூன் 05 - அனுமந்த வாகனம், மாலையில் வசந்தோற்சவம்
ஜூன் 06 - சூர்ய பிரபை வாகனம்
ஜூன் 07 - ரதோற்சவம்
ஜூன் 08 - சக்ர ஸ்நானம்
விடுமுறை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சானூரில் வருடாந்திர தெப்போற்சவம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளதால் இனி திருச்சானூரிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாராயண வனத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications