திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசனம் செய்த 23 லட்சம் பக்தர்கள்..உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. ஜூலை 15ஆம் தேதி வரைக்கும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே மாதத்தில் கோடை விடுமுறை காலம் என்பதால் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய படையெடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், திருமலையில் பக்தர்களுக்கு கோடை முன்னேற்பாடுகளை செய்வதில், தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் எந்தவித சிரமமும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக, ஜூலை 15ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வி.ஐ.பி. புரோட்டோகால் தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் தரிசனத்துக்காக கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் பக்தர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஹரிஷ்குமார்குப்தா மேற்பார்வையில், திருமலையில் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் 2 நாட்கள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
டிரைவர்கள் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக திருப்பதி மலைப்பாதைகளில் சமீப காலமாக விபத்துகள் நடந்தன. விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைந்து நீண்ட கால திட்டங்களை தயாரித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயித்த வேகத்தின்படி மெதுவாக ஓட்டுமாறு கார் டிரைவர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகளை கேட்டுக்கொள்கிறேன். வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல், திருப்பங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முந்தி செல்லாமல் ஓட்ட வேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. 56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் தர்மா ரெட்டி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications