திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.. ஆழித்தேரோட்டம் காண ஏப்.1ல் விடுமுறை
திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அவர்களை முசுகுந்தச் சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தார், அதற்குக் கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும் என இந்திரன் கேட்டார். அதற்கு அவர் திருமால் தன் நெஞ்சில் வைத்துப் பூஜித்த லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜை செய்யும் அந்த லிங்கத்தை ஒரு மனிதனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
தேவசிற்பியான மயனை வரவழைத்துத் தான் வைத்திருந்தது போலவே 6 லிங்கங்களைச் செய்து அவற்றைக் கொடுத்தார் இந்திரன். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டால் வேறு வழியின்றி இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கத்தையும் அவரிடம் கொடுத்து விட்டார். அந்த நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது.

ஆசியாவில் மிகப்பெரிய தேர்
இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திருத்தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது. அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் மொத்த எடை 300 டன் என்றும், உயரம் 96 அடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேரில் திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஆழித்தேரோட்டம்
மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் அரை டன், தேரின் முன்புறம் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் மற்றும் 4 டன் எடை கொண்ட கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரோட்டம் நடைபெறும் நாளில் கூடியிருக்கும் பக்தர்கள் ஆருரா !! தியாகேசா என்று முழக்கமிட்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுப்பார்கள். நான்கு மாட வீதிகளில் அசைந்து ஆடி வரும் திருத்தேரினை காண கண்கோடி வேண்டும்.

பஞ்சபூத ஸ்தலம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

பிரம்மாண்ட கோவில்
தியாகராஜர் கோயில், கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 இராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறு, 365 லிங்கங்கள், மூன்று பெரிய பிரகாரம் ஆகியவை வடத்தின் மொத்த நாட்களில் குறிப்பதாகச் சொல்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உன்கோயில்கள் எனப் பிரம்மாண்டமாக விளங்குகிறது. இக்கோயில் பெரிய கோயில் என்று சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பதும், மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பதும் சிறப்பாகக் கூறப்படுகிறது.

கமலாலய குளம்
திருவாரூர் கோயிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜ கோபுரமாகும். நான்கு புறமும் கோபுரங்களையும் தேரோடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் முன்புறம் உள்ள கமலாலயக் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான ஆலயத்தை முழுமையாகத் தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் தேவைப்படும்.

ஏப்ரல் 1ல் உள்ளூர் விடுமுறை
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் நாள்தோறும் பங்குனி உத்திர திருவிழா உற்சவம், சாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது. மார்ச் 16 முதல் 18 வரைக்கும் பக்தோற்சவம் எடியார் கூடும் திருவிழாவும், 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கால பைரவர் திருவிழாவும், 20ஆம் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடக்கிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளுடனும் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெறுகிறது. இறுதியாக, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications