இன்று மஹாளய அமாவாசை: முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக புனித தலங்களுக்கு படையெடுத்த பக்தர்கள்!
ராமேஸ்வரம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைவதற்கான பூஜைகளை செய்வதற்காக புனித தலங்களில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோருக்கு திதி அல்லது தர்ப்பணம் கொடுப்பது வைதீக பண்பாடுகளில் ஒன்று. புரட்டாசி மாதத்தின் பெளர்ணமி தொடக்கம் கடந்த 11-ந் தேதி முதல் அமாவாசை நாள் வரையிலான 15 நாட்கள் மஹாளய பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று அமாவாசை திதியுடன் இந்த மஹாளய பட்சம் நிறைவடைகிறது.
இன்றைய தினம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது ஒன்பது வகை நாட்டு காய்கறிகள், பச்சரிசி, பாசிப் பயிறு, பழ வகைகள், வஸ்திரதானம், மாடுகளுக்கு அகத்திக்கீரை, காக்கைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் மூதாதையர்கள் நம் குடும்பத்துடன் இருந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்பது வைதீக நம்பிக்கை.

படையெடுத்த பக்தர்கள்
மஹாளய அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் காலை முதலே பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட இன்று புரட்டாசி மாதம் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பிதுர் பூஜை செய்து வழிபட உகந்த காலம் என சொல்லப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பின்பு முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி பின்பு நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். மஹாலய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையின் அய்யன் குளம் என்று அழைக்கப்படுகின்ற இந்திர தீர்த்த குளக்கரையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு பிராமணரக்ள் மந்திரங்கள் முழங்க எள் வைத்து தர்ப்பணம் கொடுத்து தங்களுடைய குடும்பத்தையும் வம்சத்தையும் முன்னோர்கள் குலதெய்வமாக இருந்து காக்க வேண்டி வழிபட்டனர்.

திருவையாறு
திருவையாறு காவிரி படித்துறையில் மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை. உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிபட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications