காலில் விழுவது சம்பிரதாயமா? பெரியோரிடம் ஆசீர்வாதம் பெறுவது ஏன்? எங்கெல்லாம் ஆசி பெறக்கூடாது தெரியுமா
சென்னை: பெரியவர்கள், சான்றோர்கள், யோகிகள் இவர்களை பார்த்தாலே, அவர்களின் காலை தொட்டு வணங்கும் கலாச்சாரம் நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரியவர்களை பார்த்ததுமே காலில் விழுவதன் பின்னணியில் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
இப்போதொல்லாம் இளைய தலைமுறையினர், பெரும்பாலானோர் பெரியவர்களின் காலில் விழுவதில்லை.. சிலர் அதை அவமானமாகவும் கருதுகிறார்கள். மரியாதை மனதில் உள்ளது என்று சொல்லி சிலர் நட்புடன் "ஹாய்" சொல்கிறார்கள்.

மூலக்காரணம்: ஆனால், உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று உறுப்புகளாக நாம் பார்க்கலாம். உடல் என்பது நம்மை ஆட்டுவிக்கும் ஒரு சக்தியாகும்.. நம்முடைய அனைத்து காரியங்களுக்கும் இந்த சக்திதான் மூலக்காரணமாக உள்ளது.. நம்முடைய பாதங்களில்தான், மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதை உபயோகப்படுத்துவதற்காகவே காலில் விழும் பழக்கம் உருவாக்கப்பட்டதாம்..
ஞானி அல்லது மகான்களை பார்க்கும்போதும் அவர்களின் காலை தொட்டு ஆசி பெறுகிறோம். அவர்களின் பாதத்தை பற்றும்போது, அவர்களிடமிருந்து சக்தியை நாம் பெற முடியும்.. ஆனால், சிலர் தங்கள் பாதத்தை பற்றுவதற்கு அனுமதிப்பதில்லை.. எனினும், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றால், நமக்குள் நேர்மறை சக்தி அதிகரிக்கப்படும். ஆசீர்வாதம் என்பது மிகப்பெரிய சக்தி என்பதால், அதுவும் நமக்கு மிகப்பெரிய பலத்தை தருகிறது.
உடல் காந்தம்: அதாவது, மனித உடல் ஒரு காந்தம் போன்றது. தலைப்பகுதி வடதுருவம் என்றால், கால் பகுதி தென் துருவம். நாம் பெரியவர்களை வணங்கும்போது, நம்முடைய தலை அவருடைய கால்களில் படுகிறது. அதாவது அவருடைய பாதமாகிய தென் துருவத்தின் மீது, நம்முடைய தலையாகிய வட துருவம் படுகிறது.
இப்படி படும்போது, அந்தப் பெரியவர்களின் காந்த சக்தி நம் தலை வழியே நம் உடலில் பாய்கிறது. உதாரணத்துக்கு மின் அழுத்தம் அதிகமுள்ள இடத்திலிருந்து குறைவாக உள்ள இடத்தை நோக்கி மின்சாரம் பாய்வதுபோல, நாம் காலில் விழுந்து வணங்கும்போது, பெரியவர்களின் ஆற்றல் நமக்குள் வந்தடைகிறதாம்.. எனவே, பெரியவர்களின் கால்களை தொடும்போது, அவர்களின் கால்களைத் தொடும் நபர் முன்னால் குனிந்து, கைகளை முன்னோக்கி நீட்டிக் கொண்டு அவர்களுக்கு முன்னால் குனிய வேண்டும்.
ஆசீர்வாதம்: எனவே, காலில் பிள்ளைகள் விழுந்தால், அவர்களைதடுக்காமல் காலில் விழச்செய்து, ஆசீர்வதிக்கலாம்.. ஆண்களாக இருந்தால் "தீர்க்காயுஷ்மான் பவ" என்றும் பெண்களாக இருந்தால், "தீர்க்க சுமங்கலிமான் பவ" என்றும் ஆசீர்வாதம் வழங்கலாம்.. அல்லது சகல செல்வங்களும் பெற்று, குடும்ப ஒற்றுமையுடன், நல்ல தொழில் வளத்துடன், நீண்ட ஆயுளுடன், வளமாக வாழலாம்" என்றும் ஆசி தரலாம்.
ஆனால், தகனம் செய்யும் போது அல்லது தகனம் செய்துவிட்டு திரும்பும் போது பெரியவர்களின் பாதங்களை தொட்டு ஆசி பெறக்கூடாது. குளித்து முடித்து அனைத்தும் முடிந்த பிறகு ஆசி பெறலாம்.. ஒருவர் கடவுள் வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அந்த நேரத்திலும் அவருடைய ஆசீர்வாதத்தை பெறக்கூடாது. பூஜை முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல, கோயிலிலோ, கடவுள் அறையிலோ பெரியவர்கள் காலில் விழக்கூடாது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications