திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநங்கைகள் கட்டாய பண வசூல்? காசு கொடுத்தால்தான் நகர முடியும்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களை மடக்கும் சில திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த பணத்தை கொடுத்தால்தான் அவர்களை அந்த இடத்தை விட்டே நகர வைக்கிறார்கள் என்பது குறித்த வீடியோவை போலீஸுக்கு புகாராக அளித்துள்ளார்கள்.
திருவண்ணாமலைக்கு பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட இந்த மலையை வலம் வருவதன் மூலம் சிவனின் அருளை பெறலாம் என்பது ஐதீகம். இதற்காக மாதாமாதம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று வருகிறார்கள். அவ்வாறு கிரிவலம் வருவோரை திருநங்கைகள் காசு கேட்டு தொல்லை செய்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.
இதுகுறித்து ஒரு வீடியோவில் பதிவான காட்சிகளில் என்ன இருக்கிறது என்றால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். அவர்களை ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திருநங்கைகள் மடக்குகிறார்கள். அவர்களிடம் காசு கேட்கிறார்கள். அவர்கள் கொடுத்துவிட்டால் ஆசிர்வாதம் செய்து விட்டுவிடுகிறார்கள்.
இல்லாவிட்டால் அவர்கள் முன்னேறி சென்றால் ஓடி போய் அவர்களை வழிமறிக்கிறார்கள். சரி வலது பக்கம் , இடது பக்கம் செல்லலாம் என்றாலும் அவர்களை விடாமல் வழிமறிக்கிறார்கள். காசை பர்ஸில் இருந்து பறிக்காத குறையாக திருநங்கைகள் நடந்து கொள்கிறார்கள். அந்த வீடியோவில் 3 திருநங்கைகள் இப்படி செய்கிறார்கள்.
அது போல் ஆண்களையும் அவர்கள் மடக்கி காசு கேட்கிறார்கள். கொடுக்காவிட்டாலும் விடாமல் துரத்தி மடக்கி எப்படியாவது காசை வாங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் அவர்களை ஆபாசமாக திட்டியும் விடுகிறார்கள். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் செய்வதாக கூறி அவர்கள் மீது ஹார்ஷாக நடந்து கொள்கிறார்கள்.
இந்த வீடியோவிலேயே ஒரு குழந்தை தலையை தேய்த்துவிட்டபடியே தலையில் கை வைத்து கொண்டிருக்கும். ஒரு வேளை சில்லறை இல்லை என்று சொன்னாலும் "சரி காசை கொடு , நான் சில்லறை கொடுக்கிறேன்" என கூறி சில்லறையை கொடுக்கிறார்கள். அதிலும் குறைந்த ரூபாயை கொடுத்தாலும் திட்டுகிறார்கள்.
குறைந்தது 10 ரூபாய் கொடுத்தால்தான் விடுகிறார்கள். அதிலும் பெண்களிடம் நெருங்கி வந்து அவர்கள் காசு கேட்பதால் சங்கோஜத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகள் தற்போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி வருகிறார்கள். ஒருவர் நல்ல நிலையில் இருந்தால் மற்ற திருநங்கைகளை தூக்கிவிடுகிறார்கள். இதற்காக எத்தனை அறக்கட்டளைகளை திருநங்கைகளே சேர்ந்து நடத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளையும் வாங்கி தருகிறார்கள். கல்விக்காக பலர் உதவி செய்கிறார்கள். இதன் மூலம் இன்று எத்தனையோ பேர் காவல் துறையிலும் மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும் சாதித்து வருகிறார்கள். எனவே காசு கேட்கும் திருநங்கைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வில் வலம் பெற தொண்டு நிறுவனங்கள் உதவி புரிந்தால் நலமாக இருக்கும். அவர்களும் ஒரு ஜான் வயிற்றுக்காக கையை ஏந்தும் நிலை இல்லாமல் அவரை போன்ற திருநங்கைகளை கை கொடுத்து தூக்கிவிடும் நிலைக்கு உயரக் கூடும்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications