இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில் கோபுர நிலை.. சிதைந்த சிற்பங்கள்.. பாதிப்பு யாருக்கு?
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலை விரிசல் விழுந்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கத்தின் கோபுர சுவர் இடிந்துள்ளதால் யாருக்கும் பாதிப்பு வருமோ என்று பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில். நவகிரகங்களில் சுக்கிரன் பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து கோதை என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் அரங்கனுள் ஐக்கியமான சிறப்புடையது.

அரங்கம் என்றால் தீவு என தமிழில் ஒரு பொருள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் திருவரங்கம் என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது.
இந்த கோவிலில் வைணவ சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்க வந்தவரும் ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுபவருமான ஸ்ரீ ராமானுஜர் தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து நிர்வாகத்தை சீர் செய்தார். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கிருக்கும் சக்ரத்தாழ்வார் சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது போல ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அந்த வெள்ளை கோபுரத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது.
கிழக்கு பகுதியில் இருந்த கோபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் எற்பட்டதை அடுத்து கோவிலின் கோபுரங்கள், மதில் சுவர்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நள்ளிரவு இரண்டு மணியளவில் விரிசல் ஏற்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த கோபுரத்தில் இருந்த சிறிய விரிசலை கவனித்து சரி செய்திருந்தால் இடிந்து விழுந்திருக்காது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இடிந்து விழுந்த பகுதிகளை கோவில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இடிந்து விழுந்த கோபுரத்தின் வழியே மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகே வெடி வெடிக்க தடை உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டு வெடி வெடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிர்வு காரணமாகவே விரிசல் ஏற்பட்டிருந்த கோபுரம் இடிந்து விழுந்ததாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கோபுரங்களில் சேதம் ஏற்பட்டாலோ, விரிசல் விழுந்தாலோ, இடிந்து விழுந்தாலே அது ஆபத்தின் அறிகுறி என்று சொல்வார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்துள்ளது அபசகுனத்தின் அறிகுறியாக இருக்கலாம் என பக்தர்கள் சிலர் கருத்து கூறியுள்ளனர். சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நேர்ந்த இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள மிகப்பெரிய ராஜகோபுரம் 72 மீட்டர் 236 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக திகழ்கின்றது. இவை 17ஆம் நூற்றாண்டில் சேர்ந்தவையாகும். கோவிலின் தெற்கு திசையில் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு. முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் அகோபில மரத்தின் 44 வது சேர் அழகிய சிங்கரின் மோட்சம் கட்டுமான பணிகள் 1979 இல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் கோவில் கோபுரங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications