சென்னை டூ திருப்பதி டூர் பேக்கேஜ்! ஒரே நாளில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்! என்னென்ன கவராகும்?
சென்னை: திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் திருப்பதிக்கு நாளொன்றுக்கு 400 பேர் சுற்றுலா செல்லலாம். இதற்காக தினமும் திருப்பதி சுற்றுலா பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
திருப்பதிக்கு மாதந்தோறும் சென்றாலும் யாருக்கும் ஆசை விடாது. அந்தளவுக்கு வெங்கடாஜலபதியை தரிசிக்க மக்களுக்கு ஆர்வமும் பக்தியும் அதிகம். 1990, 2000 களில் எல்லாம் திருப்பதி பஸ்ஸை பார்த்ததும் ஏறி உட்கார்ந்து திருப்பதிக்கு சென்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

அப்போது செல்போன் இல்லாத காலகட்டம் என்பதால் பேருந்து ஏறுவதற்கு முன்பு போன் செய்து வீட்டுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இல்லாவிட்டால் திருப்பதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து போன் செய்து திருப்பதிக்கு வந்துவிட்டேன் என வீட்டுக்கு தகவல் கொடுப்பார்கள்.
அந்த அளவுக்கு ஏழுமலையான் என்றாலே நம் மக்களுக்கு அத்தனை பிரியம். தங்களுக்கு சாப்பாட்டிற்கு இருக்கிறதோ இல்லையோ ஏழுமலையானுக்கென வேண்டிக் கொண்டு உண்டியலில் பணம் போட்டு அதை எந்த கஷ்டம் வந்தாலும் எடுக்காமல் சிந்தாமல் சிதறாமல் உண்டியலில் போட்டு விடுவார்கள்.
ஆனால் தற்போது ரூ 300 டிக்கெட் கிடைப்பதே சிக்கலாக உள்ளது. ஒரு நொடி பொழுதில் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. சரி தர்ம தரிசனத்திற்கு செல்லலாம் என்றால் அதற்கு டிக்கெட்! நடைபாதை வழியாக செல்லலாம் என்றால் அங்கு காளி கோபுரத்தில் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகம், எல்லாவற்றையும் விட சிறுத்தை பயம் வேறு!

இதனால் ஆண்டுதோறும் கட்டாயம் செல்வோரில் பெரும்பாலானோர் திருப்பதி செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருப்பது வேறு விஷயம். இந்த நிலையில் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக தமிழ்நாடு சுற்றுலா கழகம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது.
அதாவது சென்னையிலிருந்து திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம். சென்னை சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பேருந்து செல்லும். விருப்பமுள்ளவர்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தில் பயண திட்டங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன டிக்கெட்டில் தரிசிக்கலாம். அன்று ஒரே நாளில் அதாவது இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடலாம். இதற்காக ஒரு நபருக்கு ரூ 2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரூ 2000 த்தில் ரூ 300 விரைவு தரிசன டிக்கெட், போக்குவரத்து செலவு, 3 வேளை சைவ உணவு ஆகியனவும் அடங்கும். திருச்சானூர் கோயிலுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். ஆனால் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய பக்தர்கள் தனியாக டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும். அது இந்த திருப்பதி தொகுப்பில் வராது. இந்த திருப்பதி தொகுப்பில் வருவோர் கட்டாயம் ஆதார் கார்டு அசல், ஜெராக்ஸ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். திருப்பதியில் சுவாமி தரிசனத்தை பொறுத்தே திருச்சானூருக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
இந்த டூர் பேக்கேஜில் திருப்பதி செல்ல விரும்புவோர் மேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில் புக் செய்யலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications