கடன் பிரச்சினை தீர்க்கும் அங்காரக சதுர்த்தி..இந்த பரிகாரம் செய்தால் போதும் தடைகள் நீங்கும்!
சென்னை: வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும் திருமண தடைகள் அகலும். குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். செவ்வாய்கிழமையும், சதுர்த்தி திதியும் இணைந்த நாளான இன்று அங்காரக சதுர்த்தி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் கடன் பிரச்சினை நீங்கும் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.
துன்பங்களை நீக்கி விக்னங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் வழங்கும் தெய்வமாக இருக்கும் விநாயகரை வழிபட சிறந்த தினம் மாதந்தோறும் வருகின்ற சதுர்த்தி தினமாகும். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பானது. சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமண தடையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலைமாலை அணிவிக்க கடன் பிரச்சினை தீரும்.
கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அங்காரக சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார்.
செவ்வாய்கிழமை நாளில் விநாயகரை விரதமிருந்து வணங்கினால் புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.
குழந்தை வரம் வேண்டுவோர் சதுர்த்தியன்று சாதத்தை பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும்.
சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குடும்பத்தில் உள்ள வறுமையை அகற்ற வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும்.
கடன் பிரச்சினையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளவர்கள் கையில் அருகம்புல்லையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து வேண்டுதலை முடித்துவிட்டு 'ஓம் ஸ்ரீ மஹா செல்வ கணபதியே போற்றி' என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் அறுகம்புல்லை விநாயகரின் படத்தின் முன்பு விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளாகி வருபவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications