வீட்டை சுற்றி வரும் எறும்புகள்.. நுழையும் பட்டாம்பூச்சி அதிர்ஷ்டமா?.. வாஸ்து உணர்த்தும் உண்மை என்ன?
சென்னை: சிலரது வீட்டிற்குள் பட்டாம்பூச்சி வந்து போகும், சிலரது வீட்டிற்கு எறும்புகள் ஊர்ந்து கொண்டே இருக்கும். கருப்பு எறும்புகள் அதிகமாக குவிந்து கிடக்கும். எறும்புகளும் பட்டாம்பூச்சியும் வீட்டிற்குள் வருவது நல்லதா? கெட்டதா? அதிர்ஷ்டமா என்று பார்க்கலாம்.
கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு, சித்தெறும்பு, கட்டெறும்பு, போன்ற எறும்புகள் நமது வீட்டிற்குள் வரும் இந்த எறும்புகள் வீட்டிற்குள் வருவதில் ஆன்மீக விசயங்கள் ஒளிந்து இருக்கிறது என்றும், இந்த எறும்புகள் நமது வீட்டுக்குள் வரும் திசையை வைத்துக் கூட அதற்கான பலன்களை கூற முடியும் என்றும் ஆன்மீக வாதிகள் கூறுகின்றனர்.

பிள்ளையார் எறும்பு என்று கறுப்பு எறும்பினை சொல்வார்கள். இது கடிக்காடி அந்த எறும்புகள் கூட்டமாக வெள்ளை நிற முட்டைகளை சுமந்து கொண்டு வீட்டிற்குள் ஊர்ந்து செல்லும். இப்படி கறுப்பு எறும்புகள் கூட்டமாக வந்தால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும். எறும்புகள் அதிகம் வந்து சேரும் வீட்டில் பணமும் சேருமாம். அதே நேரத்தில் சிவப்பு எறும்புகள், கட்டெரும்புகள் கடிக்கும் எறும்புகள் வீட்டிற்கு வருவது அதிர்ஷ்டம் அல்ல என்று சொல்லப்படுகிறது.
கறுப்பு எறும்புகள் வடக்கு திசையில் இருந்து எலும்புகள் வந்தால் அது மகிழ்ச்சி தரும் செய்திதான் என்றும், உங்கள் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட போகிறது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு திசையில் இருந்து எறும்புகள் வந்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம் என்றும், மேலும் எறும்புகள் சுவற்றில் கீழிருந்து மேல் நோக்கி சென்றால் உங்கள் வாழ்க்கையும் அதுபோல உச்சத்தை நோக்கி செல்ல போகிறது என்று அர்த்தம் என்றும் கூறப்படுகிறது.
மேற்கு திசையில் இருந்து எறும்புகள் வீட்டுக்குள் வந்தால், வீட்டில் உள்ள யாரோ ஒருவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதை அது சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. அல்லது வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிடும் நபர்களுக்கு அது வெற்றிகரமாக அமையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிழக்கு திசையில் இருந்து எறும்புகள் வீட்டிற்குள் வரக்கூடாது. கெட்ட செய்தி வரப்போகிறதற்கான அறிகுறியை அது உணர்த்துகிறது.

பட்டாம்பூச்சி நம்முடைய வீட்டிற்கு வந்து போவதும் நல்ல செய்தியை கொண்டு வரும். மறைந்த நம்முடைய முன்னோர்கள்தான் பட்டாம்பூச்சி வடிவத்தில் நம்முடைய வீட்டிற்குள் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் வண்ண நிற பட்டாம்பூச்சி, பொருளாதார நிலையையும் செல்வ வளத்தையும் அதிகரிக்குமாம். பச்சை நிற வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால் அது ஆரோக்கியத்தினை அதிகரிக்குமாம். வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவதன் மூலம் திருமணம் நடைபெறுவதில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அது நீங்குமாம்.
விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பதைக்கூட பட்டாம்பூச்சிகள் உணர்த்துமாம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஏதோ ஒரு நல்ல விசயத்தை சொல்வதற்காக பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் வருகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே வீட்டிற்கு பட்டாம்பூச்சி வந்தால் பதற்றப்பட வேண்டாம். அணில் பிள்ளை வந்தால் அஞ்ச வேண்டாம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications