வாஸ்து டிப்ஸ்: இந்த திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டாதீர்கள்..நல்ல நேரம் வராமல் போய்விடுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடிகாரம் இல்லாத வீடு இருக்காது. தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி ஆடம்பர பொருளாகவும் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் கடிகாரம் இருந்துள்ளது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். இன்றைக்கு செல்போனில் நேரம் பார்த்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். நம்முடைய வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும். அதற்கு நம்முடைய வீட்டில் இருக்கும் கடிகாரம் கூட உதவி செய்யும். கண்ணாடிய திருப்பி வைத்தால் ஆட்டோ ஓடுமா என்று கிண்டல் அடிக்க வேண்டாம். கடிகாரத்திற்கு வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தி உள்ளது. நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி கடிகாரத்திற்கு உள்ளது. எந்த திசையில் கடிகாரத்தை மாட்டி வைத்தால் என்ன மாதிரியான பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

Wall Clock Vastu tips: Kadigaram Vastu direction design tips

கடிகாரம் என்பது அலங்கார பொருள் அல்ல. அது உயிரோட்டமுடையது. எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடாத கடிகாரமாக இருந்தாலோ ரிப்பேர் ஆன கடிகாரமாக இருந்தாலோ அது எவ்வளவுதான் அழகான கடிகாரமாக இருந்தாலும் அதனை சுவற்றில் மாட்டி வைக்கக்கூடாது. அதே போல கண்ணாடியில் விரிசல் விட்ட உடைந்த கடிகாரத்தை மாட்டி வைத்திருக்கக் கூடாது.

ஒருசிலரின் வீட்டில் கடிகாரத்தின் வேகத்தை நேரத்தை அரை மணி நேரம் வரை அதிகமாக வைத்திருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் கடிகாரத்தை தாமதமாக ஓட வைத்திருப்பார்கள். பொதுவாக கடிகாரத்தை சரியான நேரத்தை காட்டும் வகையில் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சம் 10 நிமிடம் வரைக்கும் அதிகமாக வைக்கலாம் தப்பில்லை. ஒருபோதும் கடிகாரத்தை லேட்டாக ஓட விடக்கூடாது அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து பண வருமானத்தை குறைத்து விடும்.

கடிகாரத்தை மாட்டுவதற்கு என்று சில குறிப்பிட்ட திசைகள் உள்ளன. எந்த திசையில் கடிகாரத்தை மாட்ட வேண்டும் என்று பார்க்கலாம். சிலர் ஊசலாடும் கடிகாரத்தை வைத்திருப்பார்கள். பெண்டுலம் சீராக ஆடிக்கொண்டே இருக்கும். அந்த ஊசல் கடிகாரங்கள் உயிரோட்டமானவை அதனை கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம். கிழக்கு திசை

லபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை ய வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கிழக்குத் திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. இந்திரன் தேவாதி தேவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என புராணங்கள் விவரிக்கின்றன

நம்முடைய வீட்டில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். கிழக்குப்பக்க சுவற்றில் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது. கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

Wall Clock Vastu tips: Kadigaram Vastu direction design tips

பொதுவாகவே நம்முடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு திசை குபேரன் ஆளும் திசை. வடக்கு சுவற்றில் மாட்டும் கடிகாரம் தெற்கு பார்த்து இருக்க வேண்டும். வடக்கு சுவற்றில் கடிகாரம் மாட்டினால் செல்வ வளம் பெருகும். பொருளாதார நிலை உயரும். பண கஷ்டம் நீங்கும். வடக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரம் வட்ட வடிவத்தில் இருப்பது அதிக பலனை கொடுக்கும்.

கிழக்கு மற்றும் வடக்கு பக்க சுவர்களில் கடிகாரத்தை மாட்ட முடியாதவர்கள் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம். ஒருபோதும் தெற்கு சுவரில் கடிகாரத்தை மாட்டி வைக்காதீர்கள். தெற்கு திசை எமனின் திசை. நம்முடைய முன்னோர்கள் வாழும் திசை. எனவே தெற்கு திசையில் மாட்டி வைக்கும் கடிகாரம் நம்முடைய மறைந்த முன்னோர்களையும் எமதர்ம ராஜாவையும் தொந்தரவு செய்யும். எனவே முன்னோர்களை தொந்தரவு செய்யும் வகையில் கடிகாரத்தை தெற்கு திசையில் மாட்டி வைக்கக்கூடாது. தெரியாமல் மாட்டி வைத்திருந்தால் உடனே அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் நல்ல நேரம் வராமலேயே போய் விடும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

நம்முடைய நேரம் நல்ல நேரம் என்பதை உணர்த்துபவை கடிகாரங்கள்தான். படுக்கை அறையில் கதவிற்கு நேர் மேலே கடிகாரத்தை மாட்டக்கூடாது. வாசலுக்கு வெளியே, பால்கனியில் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது. பொதுவாக கடிகாரத்தை பரிசுப்பொருளாக தரலாமா என்று பலரும் நினைக்கலாம். நம்மை விட வயது குறைவானவர்களுக்கு ஏதாவது விஷேசம் என்றால் பரிசாக கடிகாரத்தை தரலாம். அதே நேரத்தில் வயது அதிகமானவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தரக்கூடாது என்பது விதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+