தங்கத்தை கல் உப்புக்குள் வைத்து எடுத்தால் என்னாகும்? புதிய உடையில் மஞ்சள் தடவி அணிவது ஏன் தெரியுமா?
சென்னை: பொதுவாக ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும், பின்னணியில் ஏதாவது ஒரு காரணங்கள் இருக்கும்.. அதிலும் அறிவியல் காரணங்கள் நிறையவே இருக்கலாம்.. அதனால்தான், நம்முடைய முன்னோர்கள், சம்பிரதாயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தனர்.. அதில் ஒன்றுதான் புதிய ஆடையில் மஞ்சள் தடவி , அதற்கு பிறகே அந்த ஆடையை பயன்படுத்துவர்.. புத்தாடையில் மஞ்சள் தடவ என்ன காரணம்? தங்கம் வாங்கியதுமே கல் உப்பில் புதைத்து வைக்க என்ன காரணம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாம் கடைகளில் வாங்கும் ஆடைகளில், பெரியவர்கள் மஞ்சள் தடவி தந்து, உடுத்த சொல்வார்கள்.. ஏனென்றால், கடைகளில் அந்த உடையை நீங்கள் வாங்குவதற்கு முன்பு, வேறு யாராவது அந்த ஆடையை பார்த்துவிட்டு சென்றிருக்கலாம்.. அவர்களுடைய எண்ண அலைகள் முழுக்க அந்த ஆடைகளில் மட்டுமே படிந்திருக்கும்.

அதை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்ப அலைகளைச் சுடர்விட செய்வதற்காகவே புதிய ஆடைகளில் மஞ்சள் வைப்பார்கள். மஞ்சளுக்கு தனி மகிமை உண்டு.. என்பது மங்களமான பொருளாக கருதப்படுகிறது. தோஷத்தை நீக்கும் அற்புத மூலிகையாக மஞ்சள் உள்ளதால், அதனை புத்தாடையில் தடவி தோஷத்தை நீக்குகிறார்கள்.
பொறாமை - திருஷ்டி
அதேபோல, அந்த ஆடையை அணியும்போது, பலரது பொறாமை கண்கள் உங்கள் மீது விழக்கூடும்.. அந்த பொறாமை கண்ணிலிருந்தும் மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நம்பிக்கையாகும்.. மஞ்சள் மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் மருந்து என்பதால், ஆடைகளில் உள்ள கிருமிகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
புத்தாடை என்பது கஞ்சி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டது.. அதன்மீது மஞ்சளை தடவும்போது, தீயவை எதுவும் நெருங்காது.
கல் உப்பில் தங்க நகை
அதேபோல, நீங்கள் வாங்கும் தங்கத்தை ஒரு சுத்தமான துணியில் கட்டி, உப்புக்குள் ஒரு நாள் முழுக்க முழுவதும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால் தங்கத்தின் மீது இருக்கின்ற தோஷங்களும் முழுக்க விலகி விடுவதுடன், உங்களிடம் இருக்கும் தங்கம் பெருகிக் கொண்டே போகும் என்பது நம்பிக்கையாகும். தூய்மையான வெண்மை நிற துணி இல்லாவிட்டால், சுத்தமான பேப்பரிலும் சுற்றி வைக்கலாம்.
இரவல் நகைகள்
பிறருக்கு இரவல் கொடுத்த நகை என்றாலும், அதிலும் தோஷம் வரும்.. ஒருவர் போட்ட நகையை அப்படியே வாங்கி பயன்படுத்தி கொள்ளக்கூடாது. வியர்வை துளிகள் மூலம் நகைகளில் தோஷத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே பிறரின் நகைகளை அணிந்து கொள்வதற்கு முன்பு, நீரில் சிறிது பன்னீர், மஞ்சள் கலந்து அதில் நகைகளை போட்டு எடுத்து, அதற்கு பிறகே பயன்படுத்த வேண்டுமாம்.
நகைகள் வைக்க வேண்டிய திசை
எப்போதுமே வீட்டின் கன்னி மூலையில் அதாவது, தென்மேற்கு பகுதியில் தங்கத்தை வைக்கும்போது, தங்கம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும், வீட்டின் வடமேற்கு திசையில் தங்கத்தை வைக்கக்கூடாது..
தங்க நகைகள் வைத்திருக்கும் லாக்கர், பணப்பெட்டியாக இருந்தாலும், வடக்கு திசையை நோக்கியே வைக்க வேண்டும். ஈசானிய மூலையில் தங்கம் மற்றும் பணம் வைப்பது மிகவும் நல்லது.. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வருவதால், வீட்டில் தங்கம் பெருகும் என்பார்கள்.
தங்கம் வாங்குவதாக இருந்தால், அட்சய திருதியை தவிர, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் வாங்கலாம்.. அதேபோல புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த நட்சத்திரங்கள் சேர்ந்தது போல அட்சய திருதியை வந்தால் அன்றைய தினமும் நகை வாங்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications