Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபூதியை உடம்பில் எங்கெல்லாம் பூசலாம்? திருநீறு எப்படி இட்டுக் கொள்ள வேண்டும் தெரியுமா? இத்தனை பலன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெற்றியில் பூசப்படும் விபூதியை எப்படி தயார் செய்வது தெரியுமா? திருநீறு பூசுவதால் ஏற்படும் மகிமையும், நன்மையும் என்னென்ன? விபூதியை பூசும் முறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் முன்னோர்கள் விரிவாகவே தெரிவித்துள்ளனர்.

திருநீறு என்று சொல்லப்படும் விபூதிக்கு, இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம் என்று பிற பெயர்கள் உண்டு.. பசுமாட்டு சாணத்தை எரிப்பதன்மூலம் நமக்கு விபூதி கிடைக்கிறது. மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு சாணம் போடும். இந்த சாணத்தை நெருப்பிலிடும்போது, ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு நம்முடைய நன்மையை தருகிறது.

spirituality vibhuti thiruneeru

எப்படி தயாராகிறது: பசு மாட்டுச்சாணத்தை எரித்து விபூதி செய்யப்பட காரணம், மாடு அருகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு, தனது உடலை நல்ல உடற்சக்தியுடன் தன்னுள் வைத்திருக்கிறது. எனவே, இந்த பசுமாடு இடும் சாணத்தை தீயிலிடும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவ குணத்தை வழங்குகின்றன.

நெற்றியில் விபூதி பூசுவதால், எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய எண்ணங்கள் அல்லது தீயசக்திகள் நம்மை நெருங்காது.. மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகும். 2 புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. நெற்றியில் சரியான இடத்தில் விபூதி இட்டுக் கொள்ளும்போது, நரம்புகள் தூண்டப்படும்.

சூரியக்கதிர்கள்: அதுமட்டுமல்ல, நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகிறது.. உள்ளிழுக்கவும் படுகிறது.. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து, மிகச்சரியான முறையில் அதிர்வுகளை உள்ளே அனுப்பக்கூடிய செயலை விபூதி செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள். இதை மையப்படுத்தியே, நீறு இல்லா நெற்றி பாழ் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

விபூதியை சிறிது நீரில் குழைத்து நெற்றியில் பூசினால், கபாலத்தில் உள்ள நீர் வற்ற செய்கிறது. எனவேதான், பிறந்த குழந்தையை குளிக்க வைத்ததுமே, உச்சந்தலையில் திருநீறு வைப்பார்கள். இப்படி வைப்பதால், குழந்தையின் தலையிலுள்ள ஈரத்தை விபூதி உறிஞ்சிவிடுமாம்..

எலும்பு தேய்மானம்: அதேபோல, தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம்முடைய உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் விபூதியை பூசிவந்தால், மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீர் உறிஞ்சப்படும்.. இதனால், எலும்புத்தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடுமாம்.

நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மை விபூதிக்கு உள்ளதால்தான், உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு பூசும்படி பெரியவர்கள் சொல்கிறார்கள்.. இதனால், அந்தந்த இடங்களில் வலிமை பெருகும்.

எப்படி பூசவேண்டும்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விபூதியை எப்படி இட்டுக் கொள்ள வேண்டும் தெரியுமா? எக்காரணம் கொண்டும் சுட்டுவிரல் மூலமாக விபூதி பூசக்கூடாது. இதனால் பொருட்கள் நாசம் ஏற்படுமாம்.. நடுவிரல் கொண்டு விபூதி எடுத்துப் பூசினாலும், வாழ்க்கையில் நிம்மதியில்லாத சூழல் ஏற்படுமாம்.. அதேபோல, சுண்டு விரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது, நம்முடைய கிரக தோஷங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிடுமாம்.

எனவே, முகத்தை நேராக நிமிர்த்தி வைத்து, நடு 3 விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும். அதாவது, விபூதியை கட்டைவிரல் மற்றும் மோதிர விரலை பயன்படுத்தி மிக சிறிய அளவில் எடுத்து புருவத்தின் நடுவில் பூச வேண்டும். அப்போது, விபூதி சிறிதும் தரையில் படக்கூடாது. இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது.

தவிர்க்க வேண்டும்: முக்கியமாக, எப்போதுமே வடக்கு கிழக்குமுகமாக நின்றுகொண்டுதான், விபூதி பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும், பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது..

அதேபோல, நடந்தபடியோ, படுத்தபடியோ திருநீறு பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கியே பெற வேண்டும்.. கோயிலில் விபூதி வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.. அதேபோல, ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது. நெற்றியில் பூசியதுபோலவே, தொண்டை குழியின் மீதும் விபூதி பூசி கொள்ளலாம்.. அதேபோல, மார்புக்கு மத்தியிலும் திருநீறு பூசி கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+