அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? கத்தரியில் செய்யக் கூடாதவை எவை?
சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலில் திருமணம் செய்து கொள்ளலாமா? நல்ல விஷயங்களை செய்யலாமா, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன.
கோடை காலங்களில் கத்தரியின் போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதாவது இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி கத்தரி வெயில் தொடங்குகிறது. மே 28 ஆம் தேதி முடிகிறது.

அக்னி நட்சத்திரம் அதிக வெப்பமான தினங்களாக இருக்கும். இந்த அக்னி நட்சத்திரம் காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை செய்யக் கூடாது என பெரியவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த நாட்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் இயல்பாகவே மனித சக்தியும் அதிகம் தேவைப்படும். இதனால் உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். சுருக்கமாக சொல்ல போனால் உடல் உழைப்பை தரும் செயல்களை செய்யக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கிணறு வெட்டுதல், மரம் வெட்டுவது, விதை விதைப்பது, குழந்தைகளுக்கு காது குத்துவது உள்ளிட்டவைகளை கட்டாயம் செய்யக் கூடாது என்கிறார்கள். இந்த கத்தரி வெயிலை அசுப காலம் என சொல்வது தவறு. இந்த காலத்தில் தாராளமாக சுப காரியங்களை செய்யலாம்.
அதாவது வீடு கட்டியிருந்தால் அதில் குடி போகலாம். வாடகை வீட்டை மாற்றிவிட்டு வேறு வீட்டிற்கு செல்லலாம், பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பூநூல் அணிவித்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம். இந்த அக்ன நட்சத்திர காலத்தில் திருமணம் செய்யலாமா என்றால் செய்யலாம் என்கிறார்கள்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் 5 சுப முகூர்த்த நாட்கள் வருகின்றன. மேலும் தானங்களையும் செய்யலாம். குல தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். திருமணம் செய்வதால் எந்த தோஷங்களும் இல்லை.
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஆடி சீர் வைப்பது வழக்கம். சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை கடும் வெப்ப காலம் என்பதால் பிரசவித்த பெண்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கிலேயே, ஆடியில் பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது. விதிப்படி சூரியன் உச்சத்தில் இருக்கும் போது குழந்தை பிறந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அக்னி நட்சத்திர காலம் முடிந்தவுடன் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications